அருட்கவி விநாசித்தம்பிப் புலவர்

vinasithamby-teacher-300x225அளவெட்டி வாழ்ந்த புலவர்களில் மிக முக்கிய மான ஒருவர் விநாசித்தம் பிப் புலவர். இவரை அருட் கவியெனவும்ää கவியோகி யெனவும்ää வரகவியென வும் அறிஞர்கள் பாராட்டுவர். இவர் ஒரு புலவராக மட்டுமல்லாமல் ஒரு சோதிடராகவும் மருத்துவராகவும் பேய்பிணித் தொல்லைப் போக்கும் அருளாளராகவும் மக்களுக்கு நன்கு பயன்பட்டவர். அளவெட்டி தெற்கு அருணாசலம் வித்தியாசாலையில் தமிழும் அளவெட்டி ஆங்கில பாடசாலையில் ஆங்கிலமும் கற்றவர். ஆரம்பத்தில் சங்கக்கடையொன்றில் கடமையாற்றினார். பின்னர் மலை நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகவிருந்தார். அதன் மேல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிற் பயிற்சி முடித்து பூரணத்துவம் வாய்ந்த ஆசிரியராக மலர்ந்தார்.

64இவர் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவர் இசைத்தமிழில் ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர். தாம் கவிகளை இயற்றுவதற்குத் தெய்வ அனுக்கிரகம் கிடைத்ததாக இவர் கூறுவார். “இவர் இம்மென்னு முன்னே எழுநூறும் மெண்ணூறும் – அம்மென்றால் ஆயிரம் பாட்டாகாதா” என்ற பாடலுக்கு இலக்கான ஒரு புலவர். யாருடனாவது பேனையையும் காகி தத்தையும் கையில் வைத்துக் கொண்டு கதைத்துக் கொண்டிருக்கும்போதே கவிதை உருப்பெற்றுவிடும். இவருடைய வெண்பாக் கள் இலக்கண வழுவற்றவை. உண்மையில் இவருடைய செய்யுள்கள் மரபுக் கவிதைகள் என்ற நிலைக்கு உயர்ந்தவை. இவர் சைவத் தமிழ் நூல்களில் நல்ல பயிற்சியுடையவர். சைவ இலக்கியங்களாகிய கந்தபுராணம் பெரிய புராணம் என்பவற்றில் நன்கு தோய்ந்த வர். அவரெழுதிய கந்த புராண வசன காவியம் கந்த புராணத்தில் அவர்க் கிருந்த ஈடுபாட்டை விளங்கிக் கொள்ளப் போதியதாகும். அவ ரெழுதிக் குவித்த பிரபந் தங்கள் நூற்றுக்கணக் கானவை. இசைப்பாடல் களும் பலப்பல. நாடகங் களையும் எழுதியுள் ளார். எழுதுவது மட்டு மன்றி நாடகங்களில் நடித்துமுள்ளார். பெரும் பாலும் பெண் பாத்திர மேற்றே நடித்ததையறி வோம்.

இவருக்கு அருட்கவி பிரசங்க பாகவதர்அருட்புலவர் சத்தியுபாசகர் அருள் மொழியரசுää சிவக்கவிமணி முதலாய பல பட்டங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பொதுத் தாபனங்களினால் வழங்கப்பட்டுள்ளன. இப்பட்டங்கள் மட்டுமல்லாமல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இவருக்கு முதுகலைமாணிப் பட்டங் கொடுத்துக் கௌரவித்துள்ளது. யப்பானிலுள்ள அகில உலகப் பல்கலைக் கழகம் இவருக்கு கலாநிதியென்னும் பட்டமும் வழங்கியுள்ளது. தாம் பட்டம் பெறுவது மட்டுமல்லாமல் தாமே பிறர்க்கு முதுபெரும் புலவர்ää பண்டிதமணியென்னும் பட்டங்களை யும் தமது நாகவரதநாராயணர் ஆதீனம் சார்பாக வழங்கியுமுள்ளார்.

இவர் பல அற்புத செயல்களை செய்தி ருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளோம். அவர் ‘என் கதை’ என்று தலைப்பிட்டு எழுதி வைத்த அற்புதங்களிற் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகின்றோம். நான்கு வயதுப் பையன் ஒருவன் மானிப்பாய் வைத்திய சாலையில் இறந்து விட்டான். அவனது தந்தை நாராயண பத்தன். தாயும் தந்தையுமாக அப்பிரேதத்தை கொண்டு வந்து போட்டார்கள். தாய் தந்தையர் அழுது புரண்டனர். சிறிது நேரத்தில் சிறுவன் உயிர்த்தெழுந்து தேநீர் என்று கத்தினான். அவன் உயிர் பிழைத்த செய்தி தேரில் சித்திரச் சிலையாகப் பொறிக் கப்பட்டுள்ளது என்கிறார் அருட்கவி. மணம் முடிந்த மங்கையொருத்திக்குப் பிள்ளை யில்லாமல் அவளை எல்லாரும் மலடியென்று அழைத்தார்கள். கணவனுக்கு வேறு மணம் பேசவும் முயன்றார்கள். அவள் செய்த தற் கொலை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அவள் அருட்கவியிடம் வந்து தன் நிலையைச் சொல்லி அழுதாள். அருட்கவி ‘நீ கலங்காதே உனக்குக் கண்ணன் அருளால் பிள்ளை யுண்டு’ என்று கூறியனுப்பினாராம். கண்ணன் அருளால் அடுத்த மாதமே அவள் கருவுற்று ஆண்மகனைப் பெற்றாள் என்கிறார். நமது புலவர் செம்மந்தாரை வெண்மலர் பூத்ததுää முருகனிடத்தில் தாமரை மலர் பெற்றதுää கொப்பளிப்பான் நோய்தீர்த்ததுää தண்ணி பெறமுடியாதிருந்த கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாளின் கிணறு வற்றாவாவியாகப் பெற்றது முதலாய பல அற்புதங்களை அவரின் ‘என் கதை’ யென்ற பகுதியிருந்து அறியமுடிகிறது.

நாகவரத நாராயணர் ஆலயத்தை இவர் தனிநின்று தாமாகவே அமைத்தது ஒரு அரும்பெருஞ் செயல் என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பெரும் கோவில்களைக் கட்டி முடித்தவர்கள் அரசர்கள். எங்கள் நாட்டுக் கோவில்களைப் பெரும்பாலும் கட்டியவர்கள் பொதுமக்கள். நாகவரதநாராயணர் திருத்தலம் சிறிதாக ஆரம்பித்து இப்போது பென்னம் பெரிய கட்டிடங்களைக் கொண்டதாயியல் வதற்கு அருட்கவியின் அருட்செயலே காரணம் எனலாம். நாகவரத நாராயணனைத் தரிசிக்கும் பொருட்டும் அருட்கவியிடம் ஆசிபெறவும் அவர் கையால் வீபூதி பிரசாதம் பெறவும்ää நூல் கட்டுவித்து நோய் பிணி போக்கவும் தமது எதிர் காலம் பற்றியறியவும் சோதிடம் மூலம் மணப் பொருத்தம்ää வீடமைத்தல் முதலியவற்றை தீர்மானிக்கவும் இவரிடம் நாள்தோறும் வருவோர் பலராவர். எல்லோருக்கும் அவரவர் குறை தீர்த்து மகிழ்ச்சியுடன் செல்ல வைப்பார். தேவையற்ற வினாக்களையெழுப்பி தமக்குச் சிரமம் தருவோரை அவர் கண்டித்துப் பேசுவது முண்டு. அவ்வேச்சுக்களைக்கூட வாழ்த்தா கவே விரும்பியேற்று மகிழ்ந்து செல்வர். பெரிய வைத்தியர்கள் கூட வைத்தியத்துறையில் ஆலோசனை கேட்க இவரிடம் வருவதுண் டென்பர். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராகவும் அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவராகவும் இருந்து சேவையாற்றியவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய பாடல்களில் செல்வச் சந் நிதிக் கந்தன் திருத்தல புராணமும் நாகவரத நாராயணர் பிள்ளைத் தமிழும் குறிப்பிடத் தக்கவை. அவருடைய கவியின் பெருமையை அறியும் பொருட்டு நாராயணர் பிள்ளைத் தமிழில் ஒரு செய்யுளைத் தருவோம். பிள்ளைத் தமிழென்பது காப்புப்பருவம்ää தாலப்பருவம்ää கல்யாணப்பருவம்ää முத்தப் பருவம் முதலாய பத்துப் பருவங்களைக் கொண்டதாகப் பாடப் படுவது. அம்புலிப் பருவத்தில் இருந்து ஒரு பாடலை எடுத்துக் காட்டுவோம். பாடல் பின்வருமாறு அமைகிறது.
“வரிசையின் முல்லைப் பல்லழகும்
மலர்ந் தாமரை வாயழகும்
கரமல ரழகுமங் கண்ணழகும்
தருமணி பீதாம் பரத்தழகும்
தளர்நடை யழகுங் கண்டிடலாம்
விரிபொழில் நாகேஸ் வரனுடனே
விளையாடிடவா அம்புலியே”
இதன் பொருள் பற்றிச் சிந்திப்போம். வரிசையாக அமைந்த முல்லை மலர் போன்ற பல்லின் அழகும் மலர்ந்த தாமரை மலர் போன்ற வாயின் அழகும் கைகளாகிய தாமரை மலர்களின் அழகும் அதே மலர் போன்ற கண்களின் அழகும் கட்டி முடிக்கப்பட்;ட செம்மையான தலைமுடியின் அழகும் அழகு பொருந்திய பீதாம்பர உடையழகும் தளர்ந்த நடையின் அழகும் கண்டிடலாம். ஆதலால் விரிந்த சேலையையுடைய நாகேஸ்வரப் பதியுடையானாகிய குழந்தையுடன் விளையாட அம்புலியே வருவாயா என்பதாம். செய்யுள் தெளிவுமிக்கதாகவும் ஓசை நயஞ் சிறந்ததாக வும் இருப்பது எவரும் காணக்கூடியதே.

செல்வச் சந்நிதிக் கந்தன் திருத்தல புராணத்திலிருந்து ஒரு செய்யுள் தருவோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நியாயப்படி புராணத்தின் மேன்மையை அறிய இது உதவும்.
“ஏழ்பவநோய் பெருகிவரும் இன்னல் தீரும்
இல்லறத்தில் வருகின்ற இடைஞ்சல் தீரும்
மூழ்பகையும் முரண்விளைவும் முற்றாய்த் தீரும்
மூர்க்கருண மும் மலத்தின்முனைப்புந் தீரும்
ஆழ்நரகப் பழிதீரும் அலைச்சல் தீரும்
ஐம்புலக் கொடிய செயல் அனைத்துந் தீரும்
சூழ்மனைவி யுறவுதரும் சுமைகள் தீரும்
துளங்குவேற் கரணிநீர் நோய்ந்த பேர்க்கே”

இச்செய்யுள் பொருள் வேற்கரணி தீர்த்த மாடினால் அடியார்களின் ஏழ்பிறவியிலும் தொடர்ந்துவரும் வினைத் துன்பந் தீரும். குடும்ப வாழ்க்கையில் வரும் இடைஞ்சல் யாவும் எதிர்த்து வருகின்ற பகையும் பிறரால் ஏற்படுகின்ற முரண்பட்ட வினைகளுந் தீரும். மும்மலத்தால் வருகின்ற மாயாவினைத் துன்பந் தீரும். தீராத நரகத்துக்குரிய கொடி வினை செய்த வர்க்கும் அப்பழி தீரும். எங்கே சென்றாலும் முகஞ் செல்லாமல் அலைகின்ற அலைச்சலுந் தீரும். ஐம்புலன்களால் ஏற்படுகின்ற பழிகள் தீரும். வந்த மனைவி உறவு இவற்றால் வரும் குடும்பபாரம் தீரும் என்பதாகும். இலகு தமிழில் அழகு நடையில் பாடக்கூடியவர் அருட்கவி என்பதற்கு இக்கவிகள் சான்றாவன.

Advertisement

Comments are closed.