சங்கடன் படலை

sankadam padalaiஎமது கட்டடக்கலை பாரம்பரியத்தை கட்டியம் கூறும் அற்புதமான படைப்பு. வீதியால் வருவோர் வெயிலின் கொடுமைக்கு தங்கி இளைப்பாறி போவதற்கு என எமது முன்னோர்கள் அமைத்த பல நிழல் கூடங்களில் முக்கியமானதொன்று. வீட்டின் பிரதான வாயிலுக்கு மேலாக கூரைபோடப்பட்டு அத்துடன் கீழே இரு பறமும் அமர்வதற்கும் தூங்குவதற்கும் வசதியாக குந்துகளும் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் ஒரு மூலையில் மண்குடத்தில் தண்ணீரும் வைக்கப்பட்டு இருக்கும். தமிழர்களின் விருந்தோம்பல் பண்புக்கு முக்கிய சாட்சியாக மிளிர்வது சங்கடன் படலை என்றால் மிகையாகாது.
(படமும் கருத்தும் சர்வேஸ்)

Advertisement

Comments are closed.