மகாஐனசபை கட்டட புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

அளவெட்டி மகாஐன சபையின் கட்டட புனரமைப்பு வேலைகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பெருமைமிக்க மகாஐன சபைக் கட்டட புனரமைப்பு பலகாலமாக தாமதித்து வந்த நிலையில் புலம்பெயர் வாழ் அளவெட்டி உறவுகள் நிதிப் பங்களிப்பை வழங்க முன்வந்த நிலையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சபையின் பின் பக்கமாக அமைந்திருந்த 4 பரப்பு விஸ்தீரணம் கொண்ட காணியை தனது சொந்த நிதியிலிருந்து வாங்கி அன்பளிப்புச் செய்த கனடா வாழ் அளவை மைந்தர் அழகொல்லை சிவகுமார் அவர்களின் பிரசன்னத்தின் மத்தியில் கட்டட அமைப்புக்கான நிலஒழுங்கு அமைத்தல் பணிகள் 07.05.2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கட்டட அமைப்பில் அமையவுள்ள கலையரங்கு மற்றும் காணி கொள்வனவுக்கான முழு நிதியினையும் கனடாவாழ் அளவை உறவுகள் ஏற்கவுள்ளனர். அது போன்று லண்டன் மக்கள் சங்கத்தினர் கணிசமானதொரு நிதியினை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இது போன்றே அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்து கிளையினரும் ஒரு பகுதி நிதியினை வழங்கவுள்ளனர். இக் கட்டடத் தொகுதியில் கலையரங்குடன் கூடிய மண்டபம் நூலகப்பகுதி மற்றும் புலம்பெயர் அளவை உறவுகள் கிராமத்துக்கு வரும் வேளையில் தங்கிச் செல்வதற்கான அறைகள் என்பன அமைக்கப்படவுள்ளன.

Advertisement

Comments are closed.