மீண்டும் லண்டனில் அருணோதயம்

அருணோதயக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கம் கல்லூரி வளர்ச்சிக்காக வருடம் தோறும் நடாத்த திட்டமிட்ட அருணோதயம் கலை நிகழ்வு எதிர்வரும் செப்ரெம்பர் 29 ம் திகதி அதே மண்டபத்தில் மீண்டும்... தென்னிந்திய பாடகர் மதுபாகிருஸ்ணண் மற்றும் பலர் கலந்து கொள்ளும் இசை மழை.. நனைய காத்திருங்கள்...

செய்தி

பிரான்சிலும் பழைய மாணவர்….

அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கான வெளிநாட்டுக் கிளைகளில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டிலும் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்டவுள்ளது. அதற்கான அங்குரார்ப்பண கூட்டம் எதிர்வரும் 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு DEVI MAHAL No:246 Avenue President Wilson , 93210 Plain Saint_ Denis எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. எனவே இக் கூட்டத்தில் பிரான்ஸ் நாட்டிலுள்ள அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் அனைத்துலக இணைப்பாளர் திரு.செல்லையா சிறிகாந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்…நந்தன் 0668356210 மற்றும் சிறிக்காந்தன் 00447525740166

அருணோதயாவின் இன்னிசை மாலை-2012

மரண அறிவித்தல்-திரு. தாமோதரம்பிள்ளை அருளானந்தம்

யாழ்ப்பாணம் வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும்  அளவெட்டி, இங்கிலாந்து ஆகியவற்றை வதிப்பிடமாகவும் கொண்ட  திரு தாமோதரம்பிள்ளை அருளானந்தம்  அவர்கள் (இளைப்பாறிய உதவி அதிபர், இந்துக் கல்லூரி, பண்டத்தரிப்பு) இன்று திங்கட்கிழமை (07 மே 2012) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் வடலியடைப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி தாமோதரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், அளவெட்டியைச் சேர்ந்த  காலஞ்சென்றவர்களான  திரு.திருமதி  செல்வத்துரை தம்பதிகளின்  அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி அருந்தவநாயகியின் அன்புக் கணவரும்,
அருள்செல்வன், அருந்ததி, அருண்மொழி (அருணா) ஆகியோரின் அன்புத் தந்தையும், Continue reading

அபிவிருத்தி மன்றத்துடன் கைகோர்த்த நோர்வே உறவுகள்

கவிஞர் இளையதம்பி யோகேந்திரன் அவர்களின் முன்முயற்சியினால் நோர்வே நாட்டில் வதியும் அளவெட்டி உறவுகள் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளனர். திரு யோகேந்திரன் அவர்கள் அண்மையில் தாயகம் வந்திருந்த திரு அருளம்பலம் பார்த்தீபன் அவர்களிடம் 7500.00 நோர்வே குரோனர்கள் ( இலங்கை ரூபா 159750.00) அபிவிருத்தி மன்ற நிர்வாகத்திடம் கையளிக்குமாறு அனுப்பி வைத்திருந்தார். இப்பணத்தொகை அபிவிருத்தி மன்றத்தின் கல்வித்துறை சார்செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாக அபிவிருத்திமன்ற செயலாளர் திரு கைலைநாதன் சரவணன் அவர்கள் கருத்துத்தெரிவித்தார். திரு யோகேந்திரன் அவர்கள் அளவெட்டி வைத்தியசாலை அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக முன்னரும் நிதிவழங்கியிருந்ததோடு அச்செயற்றிட்டத்தில் தொடர்ந்து பங்காற்றுவதற்கான உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந் நிதியுதவியில் பங்களித்த கீழ்வரும் உறவுகளுக்குஅபிவிருத்தி மன்றத்தின் நன்றிகள்..

திரு ,நா .திலீபன்.………………………………………………………1000,00 குரோனர்
திரு அ .பார்த்தீபன் .…………………………………………………..1000,00 குரோனர்
திரு சு .சத்திய ரூபன் ………………………………………………..1000,00 குரோனர்
திருமதி .அ .கலாராணி …………………………………………….1000,00 குரோனர்
திருமதி ம .அகிலினி …………………………………………………1000,00 குரோனர்
திரு செ.ரதன்.……………………………………………………………..1000,00 குரோனர்
திரு ஆ .ரவீந்திரன் .……………………………………………………..500,00 குரோனர்
திரு இ.யோகேந்திரன் .………………………………………………..1000,00 குரோனர்

அழகொல்லை விநாயகனின் திருவிழா காட்சிகள்…

மருந்து உறைகள் அன்பளிப்பு

அளவெட்டி அரசினர் வைத்திய சாலையில் சிகிச்சை பெறும் வெளிநோயாளர்களின் நலன் கருதி அளவெட்டி அபிவிருத்தி மன்றம் மருந்துப் பாவனைக்கான வழிகாட்டல் அச்சிடப்பட்ட மருந்து உறைகளை (Envelops ) வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்திற்கு வழங்கி வருகின்றது. இதற்கான ஆரம்ப நிதியினை லண்டனில் வசித்து வரும் பொ.கணேஸ்வரன் அவர்கள் கடந்த வருடம் செப்ரம்பர் மாதமளவில் வழங்கி இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார். தற்போது இத்திட்டம் நோர்வே வாழ் அளவெட்டி உறவுகளின் நிதி அனுசரணையில் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அண்மையில் இத்திட்டத்தின் Continue reading

சூசையப்பர் தேவாலய பெருநாள் காட்சிகள்…

புனித சூசையப்பர் தேவாலய வருடாந்த பெருநாள் கடந்த மே மாதம் முதலாம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது. ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்ற விசேட வழிபாட்டு நிகழ்வகளை தொடர்ந்து நடைபெற்ற கூடு சுற்றுதல் நிகழ்வின் போது ஏராளமான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுகளின் புகைப்படத் Continue reading

அன்னதான மடம் திறப்பு…..

கும்பழாவளைப் பிள்ளையார் கோவிலில் அமைக்கப்பட்ட அன்னதான மடம் விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.அடியார்களின் நிதிப்பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட இம் மண்டபம் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சனைகள் அனைத்திற்குமான தீர்வுகளை கொண்டதாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.ஆலய மேற்கு வீதியில் வடக்கு தெற்காக அமைக்கப்பட்டுள்ள ம்மண்டபம் தண்ணீர் தாங்கி தனியான குடிநீர்கிணறு சமையலறை மற்றும் மலசலகூட வசதிகள் என்பவற்றையும் கொண்டுள்ளது.ஓரே நேரத்தில் 500 பேர் அமர்ந்து உணவு உண்ணக் கூடிய வசதிகள் உள்ளன.

புகைப்படத்தொகுப்பைக் காணலாம்

திருப்பள்ளியெழுச்சி இறுவட்டு வெளியீடு

அழகொல்லை விநாயகப் பெருமான் மீது அளவை மண் தந்த பண்டிதர் மாணிக்கம் அவர்களால் பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் இந்திய இசைக்கலைஞர்களின் பிண்ணணி இசைக்கோர்ப்புடன் நேர்த்தியாக இசையமைக்கப்பட்டு மாணிக்கப்பண்டிதரின் மகன் சத்தியமூர்த்தியின் தயாரிப்பில் ஆலய பூங்காவன உற்சவ தினமான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தில் வெளியிடப்படவுள்ளது. இந் நிகழ்வுக்கு ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் திரு.வை.த.இராசநாயகம் தலமை தாங்க ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியும் அளவை மண்ணிண் மைந்தருமான விகடகவி மு.திருநாவுக்கரசு கலந்து கொள்ளவுள்ளார். இந் நிகழ்வில் அறிமுகவுரையை சங்கீதபூசணம் வி.கே.நடராஜா நிகழ்த்த வெளியீட்டுரை மற்றும் நயப்புரையை பிரதமவிருந்தினர் நிகழ்த்துவார். முதற்பிரதியை பிரபல வர்த்தகர் கல்விக் காருண்யன் இ.பே.நாகரட்ணம்- ஈ.எஸ்.பி நிறுவன உரிமையாளர் பெற்றுக்கொள்வார்.

வந்தது முதல் நிதி…

அருணோதயக் கல்லூரி வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கான முதல் பங்களிப்பை திரு.நன்னித்தம்பி வரோபன் தனது தந்தையார் அமரர்.நன்னித்தம்பி ஞாபகார்ததமாக இலங்கைப் பணம் ரூபா ஒரு லட்சத்தை இட்டு ஆரம்பித்து வைத்துள்ளார். இவருக்கு கல்லூரி சமூகம் நிதியம் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. அமரர் நன்னித்தம்பியின் புகைப்படம் மற்றும் மேலதிக வாழ்க்கைக் குறிப்புக்கள் கிடைக்கப்பெற்றதும் இணையத்தில் பிரசுரிப்போம்….

சண்டிலிப்பாய் இந்துவை பந்தாடியது மகாஜனா

யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் மகாஜனக்கல்லூரி வெற்றி பெற்றுச் சம்பியனானது.

கடந்தவாரம் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி அணியை  எதிர்த்து மகாஜனக்கல்லூரி அணி மோதிக்கொண்டது.

ஆரம்பத்தில் இருந்தே மகாஜனக்கல்லூரி வீராங்கனைகள்அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் Continue reading

அமைக்கப்படாத தபாலகம் காத்திருக்கும் காணி

அளவெட்டி தபாலகத்துக்கு சொந்த கட்டடம் அமைக்கவென சுவிஸ் வாழ் அளவெட்டி மைந்தர் செல்லத்துரை சிவபாலன் தனது சொந்தப் பணத்தில் வாங்கி தபால் திணைக்களத்துக்கு வழங்கிய காணி பல ஆண்டுகளாக தபாலக வருகைக்காக காத்துள்ளது. அரசஅதிபர் கணேஸ் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு மறக்கப்பட்ட இவ் விடயம் தொடர்பில் பல்வேறு தடவைகள் பல்வேறு தரப்பினருடனும் அளவெட்டி மக்களின் பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர். எனினும் எந்தவிதமான அக்கறையும் எடுக்கப்படவில்லை. தபாலகம் அமைப்பது தொடர்பாக பல காற்றில் பறந்த உறுதிமொழிகள் கலாவதியாகிவிட்டன என அளவெட்டி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமாகாண அஞ்சல் மா அதிபரே இந்த விடயம் உங்களுக்கு சமர்ப்பணம்…..

தவளக்கிரி அம்மனின் கும்பாபிடேகம் நேரடி ஒளிபரப்பு

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மனின் மகா கும்பாபிடேக நிகழ்வு எமது இணையத்தளத்திலும் ஆலயத்துக்கென அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட www.alaveddythavalakiriamman.com இணையத்திலும் ஒளிபரப்படுகின்றது. எனவே இவ் தகவல்களை அம்பிகை அடியார்களுக்கு தெரியப்படுத்துவோம்..

Watch live streaming video from alaveddythavalakiriamman at livestream.com

விரிவுரையாளராக நியமனம்

kabilan

அளவெட்டியை பூர்விகமாகக் கொண்ட சுந்தரமூர்த்தி கபிலன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக புவியியற்துறையில் திட்டமிடல் துறை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி பழைய மாணவனான இவர் மகாஜன சபை கலைஞர் வட்டத்தின் இசைத்துறை இணைப்பாளராக கலைப் பணி ஆற்றுகின்றார். இசைத்துறை கலைஞராக தன்னை தக்கவைத்துள்ள கபிலன் திட்டமிடல் துறையின் முதலாவது நிரந்தர விரிவுரையாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு எமது இணைய குழுமத்தினதும் அளவை சமூகத்தினதும் வாழ்த்துக்கள்…

ரமேஸ் சர்மாவின் புதிய பாடல்…

பாடலைக் காண அழுத்துங்கள்

‘ பெரியபுராணம்’ சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு

ஊர்காவற்றுறை நாரந்தனை வடமேற்கு (தம்பாட்டி) அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விழா எதிர்வரும் 26.04.2012 தொடக்கம் 05.05.2012 வரையான பத்துநாட்கள் நடைபெறும். இம்மகோற்சவ காலத்தில் தினந்தோறும் மாலை 6.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்ட பேச்சாளர்கள் வழங்கும் ‘ பெரியபுராணம்’  சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு இடம்பெறும் இத்தொடர் சொற்பொழிவினை அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்ட செயலாளர் மகாஜனாக்கல்லூரி ஆசிரியர் திரு.வை. விஜயபாஸ்கர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர் ‘ செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் ‘செஞ்சொல்வேந்தர்’ எஸ்.ரி.குமரன், அளவெட்டி அபிவிருத்தி மன்ற தலைவர் ஊர்காவற்றுறை சமூக சேவை அலுவலர் திரு.வே.சிவராஜா, யாழ்.பல்கலைக்கழக  மருத்துவபீட உதவிப்பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா, பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர் திரு.கே.எஸ்.ரமணன். யாழ் செயலக நிகழ்ச்சித்திட்ட உதவியாளர், இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர் திரு.க.கோபிராஜ், ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.பெரியபுராணம் பேசும் வேறுபட்ட விடயப்பரப்புக்களை தழுவியதாக  இச்சொற்பொழிவு நிகழ்வு அமையவிருக்கின்றது.

ஊர்காவற்றுறை நாரந்தனை வடமேற்கு (தம்பாட்டி) அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ விழா எதிர்வரும் 26.04.2012 தொடக்கம் 05.05.2012 வரையான பத்துநாட்கள் நடைபெறும். இம்மகோற்சவ காலத்தில் தினந்தோறும் மாலை 6.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்ட பேச்சாளர்கள் வழங்கும் ‘ பெரியபுராணம்’ சொற்பொழிவுத்தொடர் நிகழ்வு இடம்பெறும் இத்தொடர் சொற்பொழிவினை
  • அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்ட செயலாளர் மகாஜனாக்கல்லூரி ஆசிரியர் திரு.வை. விஜயபாஸ்கர்
  • கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர் ‘ செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன்
  • சைவப்புலவர் சித்தாந்த பண்டிதர் ‘செஞ்சொல்வேந்தர்’ எஸ்.ரி.குமரன்
  • ஊர்காவற்றுறை சமூக சேவை அலுவலர் திரு.வே.சிவராஜா
  • யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப்பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா
  • பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை உதவி விரிவுரையாளர் திரு.கே.எஸ்.ரமணன்
  • யாழ் செயலக நிகழ்ச்சித்திட்ட உதவியாளர், இந்துநாகரிகத்துறை ஆசிரியர் திரு.க.கோபிராஜ்
ஆகியோர் நிகழ்த்துகின்றனர். பெரியபுராணம் பேசும் வேறுபட்ட விடயப்பரப்புக்களை தழுவியதாக இச்சொற்பொழிவுத்தொடர் அமையவிருக்கின்றது.

சித்திரை மாத சிறப்பு நிகழ்வுகள்

அளவெட்டி நலன்புரிச்சங்கம் சுவிற்ஸர்லாந்து அனுசரணையில்  மகாஜன சபை கலைஞர்  வட்டத்தினர் வழங்கும்; சித்திரை மாத சிறப்பு நிலாக்காலம் முத்தமிழ் கலை நிகழ்வுகள் எதிர்வரும் சித்திரா பௌர்ணமி தினத்தினை அடுத்து வரும் வாரத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கலாபூஷணம் சிவஞானசேகரம் அவர்களின் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி, அல்வாய் மனோகரா நாடகமன்றம் மற்றும் அளவெட்டி மகாஜன சபை கலைஞர்  வட்டத்தினர் இணைந்து வழங்கம் கோவலன் கண்ணகி இசைநாடகம் பட்டிமன்றம் மற்றும் கவியரங்க நிகழ்வுகள் என்பனவ்ற்றை உள்ளடக்கிய பல கலை நிகழ்வுகள் அரங்கேறக் காத்திருக்கின்றன. இந்நிகழ்விற்கு சமாந்தரமாக திரு. செல்லத்துரை சிவபாலன் அவர்களின் நிதி அனுசரணையில் அளவெட்டி மகாஜன சபை வெளியீடுகளாக  அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கிய கவிதைத்தொகுப்பு ஒன்றினையும் எமது ஊர் எழுத்தாளர்களின் படைப்புக்களின் தொகுப்பான சிறுகதைப்பெட்டகம் ஒன்றினையும் வெளியீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதே காலப்பகுதியினை அண்டியதாக அளவெட்டி மக்கள் சங்கம் – லண்டன் அனுசரணையில் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினர் நடாத்தம் வருடாந்த சாதனையாளர் கௌரவிப்பு விழா – 2011 நிகழ்வினையும் சேவாலங்காமன்றம் மற்றும் புலம் பெயர், உள்ளுர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டுவரும் பெரியார் மயில்வாகனர் ஞாபகார்த்த சிறுவர் பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வினையும் நடாத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. நிகழ்வுகள் தொடர்பான காலஅட்டவணை மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெறுவதுடன் இவற்றிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. விரைவில் முழுமையான விபரங்கள் வெளியிடப்படும்.

அளவெட்டி நலன்புரிச்சங்கம் சுவிற்ஸர்லாந்து அனுசரணையில்
மகாஜன சபை கலைஞர் வட்டத்தினர் வழங்கும் சித்திரை மாத சிறப்பு நிலாக்காலம் முத்தமிழ் கலை நிகழ்வுகள்
எதிர்வரும் சித்திரா பௌர்ணமி தினத்தினை அடுத்து வரும் வாரத்தில் சிறப்பாக நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கலாபூஷணம் சிவஞானசேகரம் அவர்களின் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி,
அல்வாய் மனோகரா நாடகமன்றம் மற்றும் அளவெட்டி மகாஜன சபை கலைஞர் வட்டத்தினர் இணைந்து வழங்கும் கோவலன் கண்ணகி இசைநாடகம் பட்டிமன்றம் மற்றும் கவியரங்க நிகழ்வுகள்
என்பனவற்றை உள்ளடக்கிய பல கலை நிகழ்வுகள் அரங்கேறக் காத்திருக்கின்றன. இந்நிகழ்விற்கு சமாந்தரமாக திரு. செல்லத்துரை சிவபாலன் அவர்களின் நிதி அனுசரணையில் அளவெட்டி மகாஜன சபை வெளியீடுகளாக அளவெட்டியைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கிய கவிதைத்தொகுப்பு ஒன்றினையும் எமது ஊர் எழுத்தாளர்களின் படைப்புக்களின் தொகுப்பான சிறுகதைப்பெட்டகம் ஒன்றினையும் வெளியீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதே காலப்பகுதியினை அண்டியதாக அளவெட்டி மக்கள் சங்கம் – லண்டன் அனுசரணையில் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினர் நடாத்தும் வருடாந்த சாதனையாளர் கௌரவிப்பு விழா – 2011 நிகழ்வினையும் சேவாலங்காமன்றம் மற்றும் புலம் பெயர், உள்ளுர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டுவரும் பெரியார் மயில்வாகனர் ஞாபகார்த்த சிறுவர் பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வினையும் நடாத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. நிகழ்வுகள் தொடர்பான கால அட்டவணை மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெறுவதுடன் இவற்றிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. விரைவில் முழுமையான விபரங்கள் வெளியிடப்படும்.

ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய கும்பாபிஷேகம் 25.04.2012

அளவெட்டி வடக்கு (தவளக்கிரி)

அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய புனருத்தாரண

நவகுண்டபக்ஷ அஷ்டபந்தன

கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 25.04.2012

கர்மாரம்பம் 19.04.2012 எண்ணெய்க்காப்பு 23,24 .04.2012

அம்பிகை மெய்யடியார்களே !

விராட் புருடனது இடைநாடியானதும் தென்தட்சிணகைலாயமென போற்றப்படுவதும் இறைவனை இசைய வைக்க சாமகானம்மீட்டிய தமிழ்மன்னனாம் இராவணேஸ்வரனால் பலகோடி லிங்கப்பிரதிஸ்டைகள் செய்யப்பட்டு இலங்கையானதும் சைவநாயன்மாரால் பாடப்பெற்றபஞ்ச ஈச்சரங்களை தன்னகத்தே கொண்டதுமாகிய ஈழமணித்திருநாட்டின் வடபால் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இசைபாடிப்பரிசாய யாழ்ப்பாணத்தின் கண் இசை விளைநிலமாம்- பல் இசைமேதைகளையும் பல்துறை சிவதொண்டர்களையும் கொண்ட அளவெட்டிப்பதியின் வடபால் தவளக்கிரியில் எழுந்தருளி அருளாட்சிபுரியும்அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாளுக்கு நிகழும் மங்களகரமான நந்தன வருஷம் சித்திரைத்திங்கள் 13ம்நாள் (25.04.2012) புதன்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 1.30 மணி வரையுமுள்ள மிதுன லக்கினமும் மிருகசீரிட நட்சத்திரமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில்நவகுண்டபக்ஷ அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற புவியடங்கக்காத்த திரிபுரசுந்தரியாம் அன்னை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்பாளின் திருவருள் கைகூடியுள்ளமையால் அம்பிகை அடியார்கள் அனைவரும் மேற்படி புனிதநிகழ்வில் கலந்துகொண்டு அம்பிகையின் அருட்கடாட்சத்தினைப் பெற்றுய்ய வேண்டுகின்றோம்

மரண அறிவித்தல் – திருமதி.கதிரேசர்பி்ள்ளை

மகாஜனக் கல்லூரியின் புகழ் பூத்த ஆசிரியர் கதிரேசம்பிள்ளையின் மனைவி சித்திரை மாதம் 13ம்திகதி காலமானார்.
இவரது இறுதிச் சடங்குகள் 15.04.2012 அளவெட்டியில் நடைபெற்றது. இவரது மகன் ஆதவன் நன்கு அறியப்பட்ட இலக்கியவாதியாவார்.

தொடர்புகளுக்கு (Mr & Mrs. Kathiresampillai’s daughter):    0094 718015699
Phone number of Adhavan (Mr & Mrs. Kathiresampillai’s son): 0045 62223649

-Sooriyan Bala balasooriyan@yahoo.com

டென்மார்க் தமிழர் வாழ்வியல்

;நமது மக்கள் சிறப்பாக வாழத்தானே……………………………..

;

;

;

;

;

டென்மார்க்கில் தமிழர் வாழ்விலும், கலாச்சார வைபவங்களிலும் கடந்த 25 வருட வரலாற்றில் புதிய திருப்பங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்த மாற்றங்களை வழமைபோல தீமையானது என்று பார்க்காமல் நல்ல விடயங்களே என்ற கோணத்தில் அவதானிக்க வேண்டும்.

திருமணங்கள், பூப்புனித நீராட்டுவிழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள் போன்றன முழுமையான கலாச்சார நிகழ்வுகளாக மாற்றமெடுத்துக் கொண்டிருக்கின்றன. முன்னைய காலங்களில் மதியம், தவறினால் பி.ப. ஐந்து மணியளவில் முடிவடையும் நிகழ்வுகள் இப்போது இரவு பத்து மணிவரை நீடிப்பு பெறுகின்றன. இதனால் ஒரே நாளில் பல நிகழ்வுகள் நடந்தாலும் அனைத்திற்கும் அவசரப்படாமல் போக முடிகிறது. மக்கள் இங்கும் அங்குமாக சுழன்று கொண்டிருக்க, நிகழ்வுகளும் புதிய புதிய முகங்களுடன் நிமிடத்திற்கு நிமிடம் புதுப்பொலிவு பெற்றுவிடுகிறது.

மண்டப அலங்காரங்களில் புதிய மாற்றங்கள் புகுந்துவிட்டன. தாயகத்தில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மாற்றமின்றி பாவனையில் இருந்த யாழி பூட்டிய பாரம்பரிய மணவறைகள் Continue reading

நந்தனவருட புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்கள்

அளவெட்டி பிரதேசத்தின் இருவங்கிகளும் பிறந்திருக்கும் நந்தனவருட புத்தாண்டு கொடுக்கல்வாங்கல்களை 14.04.2012 சனிக்கிழமை ஆரம்பித்தன. வாடிக்கையாளர்களுக்கு கைவிஷேடம் வழங்கி கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பித்து வைத்ததுடன் சேமிப்புக்களுக்கான விஷேட பரிசில்களும் வழங்கப்பட்டன. பெருமளவான வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் சேமிப்பினை மேற்கொண்டதனை அவதானிக்க முடிந்தது.

அளவெட்டி மக்கள் வங்கி முகாமையாளர் இதுபற்றி கருத்துத்தெரிவிக்கையில் எதிர்பார்த்ததனை விட சிறப்பாக வாடிக்கையாளர்கள் சேமிப்பினை மேற்கொள்வதாகவும் வங்கி உத்தியோகத்தர்கள் அதிகமான வேலை நெருக்கடியினை எதிர்நோக்குகின்ற போதிலும் விரைவான சிறப்பான சேவையினை வழங்கிவருவதாக குறிப்பிட்டார்.

இலங்கை வங்கியிலும் கணிசமான வாடிக்கையாளர்கள் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்தனர் எனினும் இலங்கை வங்கி நேரடியான வங்கி வலையமைப்பில் ( Online /Bank network system ) இணைக்கப்படாமையால் சில வாடிக்கையாளர்கள் இவ்வலையமைப்பு வசதியுள்ள மல்லாகம், சுன்னாகம் இலங்கை வங்கிக் கிளைகளை நாடிச்செல்லும் நிலை காணப்பட்டது.

அமெரிக்கன் சிலோன்மிஷன் தவக்காலஇசைநிகழ்வு

அளவெட்டி அமெரிக்கன் சிலோன்மிஷன் தேவாலயத்தில் தவக்காலத்தின் சிறப்பு நிகழ்வாக யேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் இசைநிகழ்வுஅண்மையில்  நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அருட்திரு யேசுப்பிரகாசம் அவர்களால் நிகழ்த்தப்பட்ட இச்சிறப்பு இசைமழை காண இப்பிரதேச கிறிஸ்தவ பெருமக்கள் மட்டுமன்றி இந்து சகோதரர்களும், பௌத்த இஸ்லாமிய மதங்களை சார்ந்த Continue reading

தூரநோக்கும் செயல் விருப்பும் கொண்டகோணேஸ்வரன்

பணிபுரி பலனை எதிர்பாராதே’ என்று உத்தமர் மகாத்மாகாந்தி கூறிய வார்த்தைக்கு அமைவாக வாழ்ந்து காட்டியவர் அமரர் நாகராசா கோணேஸ்வரன். மக்களுக்குத் தன்னாலான சேவையை ஆற்ற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயலாற்றி மக்கள் மனங்களில் நீங்காத பதிவைப் பெற்றுக் கொண்டவர். கல்விச் சேவை, மக்கள் பொதுநல சேவை என்று அவர் தாம் வாழ்ந்த குறுகிய காலத்தில் ஆற்றிய பணிகள் அளப்பரியன. மக்களை நேசித்தவர், அவர்களுக்கான முன்னேற்றம் காண விளைந்து அத்தகைய ஆக்க முயற்சிகளில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பொது மக்கள் எல்லோராலும் மதிக்கப்பட்டு நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த கோணேஸ்வரனின் முப்பத்தெட்டு ஆண்டுகால வாழ்க்கை வரலாறாகிவிட்டது. Continue reading

கோணேஸ்வரன் நினைவு தினநிகழ்வுகள்

நாகராஜா கோணேஸ்வரன்((B.Sc, S.L.A.S, Master of Social Welfare)அளவெட்டி கோணேஸ் மற்ஸ் அக்கடமியின் நிறுவுனர் அமரர் நாகராஜா கோணேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினநிகழ்வுகள் உணர்வுபூர்வமாக கல்வி நிறுவன சமூகத்தால் அனுஷ்டிக்கப்பட்டது. 10.04.2012 அன்று அன்னாரின் ஓராண்டு நினைவு தினத்திற்கு முன்னோடியாக கல்விநிறுவன பழையமாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் இணைந்து Continue reading

புத்தாண்டு வாழ்த்துக்கள்…

மலரப் போகும் புத்தாண்டு எல்லோருக்கும் மகிழ்சி நிறைந்த வாழ்வளிக்கும் ஆண்டாக மலரட்டும்……எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்….