Category Archives: செய்தி

கோலூன்றி பாய்தலில் வெண்கலப்பதக்கம்

11793434_852313881529750_1989627211_n

எமது அளவெட்டி கிராமத்தின் மைந்தனும் அருணோதயாக்கல்லூரி பழையமாணவனும்மாகிய கோபாலன் கணதீபன் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட 93 வது மெய்வன்மைபோட்டியில் நடைபெற்ற ஆண்களுக்கான திறந்த கோலூன்றிப்பாய்தல் போட்டியில் 4.50 மீற்றர் உயரத்தை கடந்து வெண்கலபதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

11793434_852313881529750_1989627211_n

குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயமகோற்சவ பதிவுகள் 2015

Aran (115)

அருள்மிகு குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயத்தின் மன்மத வருசத்திற்காக மகோற்சவ நிகழ்வுகள் பக்திபூர்வமாகவும் எம் பெருமானின் திருவருளாளும் இனிதே நிறைவேறியது. 22.07.2015 புதன்கிழமை கொடியயேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவமானது தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற்றது. 29.07.2015 இரவு சப்பறத்திருவிழாவும், 30.07.2015 வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், 31.07.2015  தீர்த்த திருவிழாவும் பல நூற்றுக்கனக்கான அடியவர்கள் மத்தியில் இனிதே நிறைவேறியது. உற்சவ காலற்களில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இறுதியாக வைரவர் பொங்கல் 07.08.2015 அன்று நடைபெறவுள்ளது.

அளவெட்டி முதலியவேள் முன்பள்ளிக்கு வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ ச.சஜீவன் கற்றல் கற்பித்தல் சாதனங்கள் வழங்கியுள்ளார்

11751926_1476189346013449_8644175845371419660_n
நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரனையுடன் வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ சண்முகலிங்கம் சஜீவன் அவர்கள் அளவெட்டி முதலியவேள் முன்பள்ளி மாணவர்களுக்கு
பெறுமதியான  கற்றல் உபகரணங்களை வழங்கியதுடன் முன்பள்ளிக்கும் மிகவும் பெறுமதியான கற்பித்தல் சாதனங்களை வழங்கியுள்ளார்.
”அறிவாயுதமே எமது பலம் – கல்வியே எமது வாழ்வாதாரம்” எனும் கொள்கையுடன்  சமூகசேவை செய்துவரும் நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தினர் உப தவிசாளர் கௌரவ சண்முகலிங்கம் சஜீவன் ஊடாக பல்வேறுபட்ட செயற்பாடுகளை வட மாகாணத்தில் பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.
முதலியவேள் முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து எந்த விதமான நிதியையும் பெற்றுக்கொள்ளாது, முற்றிலும் இலவசமாகவே கற்பித்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தினர் உப தவிசாளர் கௌரவ சண்முகலிங்கம் சஜீவன் ஊடாக முதலியவேள் முன்பள்ளிக்கு வழங்கிய உதவிகளை முதலியவேள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் நன்றியுடன் பாராட்டுகின்றனர்.

சீனன்கலட்டி ஞரனோதய வித்தியாலயத்தின் கட்டடத் திறப்புவிழா,ஸ்தாபகாரின் சிலை அங்குரார்ப்பணம்

s1 (93)

அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தினை மீண்டும் எமது பிரதேசத்தின் சிறந்த ஆரம்பப் பாடசாலையாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் பாடசாலைச் சமூகம் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் முக்கியமான நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

பாடசாலைப் பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக் கிளையின் முயற்சியினாலும் புலம்பெயர்ந்து உலகமெங்கும் பரந்துவாழ்கின்ற பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 70×25 அளவுடைய கட்டடம் அண்மையில் ஐக்கிய இராச்சியக் கிளைப் பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியிலாளர் பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஓர் புதிய கட்டடத்தின் தேவை உணரப்பட்டது. அதனடிப்படையில் முன்வந்த பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக் கிளையின் அரிய முயற்சியின் பயனாக இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக பாடசாலையி்ன் ஸ்தாபகர் குடும்பத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி.இ.தெய்வேந்திரன், வைத்திய கலாநிதி செங்கமலம் தெய்வேந்திரன், St. Johns கல்லூரியின் பிரதி அதிபர் திரு.துஸந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் கௌரவ சோ.சுகிர்தன் அவர்கள், பாடசாலையின் பழைய மாணவனும் சிற்பக்கலைஞருமான சிற்பி சிவப்பிரகாசம் அவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள், பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்திருந்தனர்.

அருணோதயக்கல்லூரியில் மரம் விழுந்து வகுப்பறைக்கட்டடம் சேதம்

a5

அருணோதயக்கல்லூரியில் தரம் இரண்டு வகுப்பறைக்கட்டடத்தின் மேல் வாகை மரம் முறிந்து விழுந்ததில் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. இது நடைபெற்றது இரவு வேளை ஆகையால் மாணவர்களிற்கு பாதிப்பு ஏற்படவில்லை. கட்டடமும் 40 ஆண்டுகளிற்கு மேற்பட்ட பழைய கட்டடம். வகுப்பறை வசதியின்மையால் இக்கட்டடத்தில் வகுப்புக்களை நடத்த வேண்டிய நிலை. யாராவது கொடைவள்ளல்கள் விரும்பினால் பச்சிளம் பாலகர்கள் பயமில்லாமல் வசதியுடன் கற்க கட்டடங்களை கட்டிக்கொடுக்கலாம். தற்போது மரத்தின் கீழேயே வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்புகளுக்கு அதிபர்  0094-21-224-1072

 

அலுக்கை நாவலடி ஞான வைரவர் கும்பாபிசேக தினம்

DSC_0699

அண்மையில் நடைபெற்ற அலுக்கை நாவலடி ஞான வைரவர் கும்பாபிசேக தின நிகழ்வுகளின் பதிவுகள்..

விநாயகர் விளையாட்டு கழகத்தின் பரிசளிப்பு விழா

2

21

அளவெட்டி தவளக்கிரி அம்மன் தேர்த்திருவிழா

6

அளவெட்டி தவளக்கிரி அம்மன் சப்பறத்திருவிழா

20150622_194820

மகாஐனசபை ஈஸ்வரன் முன்பள்ளி விளையாட்டு விழா

p130
Powered by WordPress | Designed by: SEO Consultant | Thanks to los angeles seo, seo jobs and denver colorado