Cincopa video hosting solution for your website. Another great product from Cincopa Send Files.

அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் வைத்தியகலாநிதி ராதேயன் உயர்கல்வி வாய்ப்பு பெற்று லண்டண் பயணமானார். மகாஐனக் கல்லூரியின் பழைய மாணவன் ஆகிய இவர் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை பூர்த்தி செய்த பின்னர் சொந்த கிராமத்தில் தனது கிராம மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென விரும்பி அளவெட்டி பிரதேச அரசினர் வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார். இவ் வைத்தியசாலையில் பணியாற்றிய முதலாவது M.B.B.S பட்டம் பெற்ற வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதுடன் இவரது காலத்தில் அளவெட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டு அம்புலன்ஸ் வசதி கொண்டதாகவும் மாற்றியமைக்கப்பட்டது.அந் நாட்களில் தெல்லிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பதவியுயர்வு பெற்றதுடன் பின்னர் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார். அளவெட்டி அபிவிருத்தி மன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக பொறுப்பேற்று பல பணிகளை அளவெட்டி கிராமத்துக்கு [...]" />

வைத்தியர் ராதேயன் லண்டண் பயணம்

Cincopa video hosting solution for your website. Another great product from Cincopa Send Files.

அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் வைத்தியகலாநிதி ராதேயன் உயர்கல்வி வாய்ப்பு பெற்று லண்டண் பயணமானார். மகாஐனக் கல்லூரியின் பழைய மாணவன் ஆகிய இவர் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை பூர்த்தி செய்த பின்னர் சொந்த கிராமத்தில் தனது கிராம மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென விரும்பி அளவெட்டி பிரதேச அரசினர் வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார். இவ் வைத்தியசாலையில் பணியாற்றிய முதலாவது M.B.B.S பட்டம் பெற்ற வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதுடன் இவரது காலத்தில் அளவெட்டி வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டு அம்புலன்ஸ் வசதி கொண்டதாகவும் மாற்றியமைக்கப்பட்டது.அந் நாட்களில் தெல்லிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பதவியுயர்வு பெற்றதுடன் பின்னர் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றியிருந்தார். அளவெட்டி அபிவிருத்தி மன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைவராக பொறுப்பேற்று பல பணிகளை அளவெட்டி கிராமத்துக்கு ஆற்றியிருந்தார். தற்போது உயர் கல்வி வாய்ப்பு பெற்று லண்டண் செல்லும் இவர் தனது கல்வியை நிறைவு செய்து கொண்டு மீளவும் எமது கிராமத்துக்கு திரும்பி தனது சேவையை வழங்க வேண்டும் எனும் எதிர்பார்ப்போடு எமது இணையத்தள ஆசிரியர் குழாம் அளவெட்டி மக்கள் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

Leave a Response