அதிபர் மகேந்திரராஜாவுக்கு பாராட்டு விழா
அருணோதயக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.கி.மகேந்திரராஜாவின் பணிகளை கௌரவிக்கும் முகமாக கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம் பாராட்டு விழாவொன்றை கொழும்பில் நடாத்தியது. இவ் விழாவை முன்னிட்டு பத்திரிகை வாயிலாக வாழ்த்துச் செய்திகள் வெளியிடப்பட்டதுடன் அதிபரது சேவைகளை பலரும் விதந்து பாராட்டி பேசியிருந்தனர். முன்னாள் அதிபர் ந.சிவபாதன் தலமையில் நடைபெற்ற இவ் விழாவில் கல்லூரியுடன் தொடர்புடைய ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
