Cincopa video hosting solution for your website. Another great product from Cincopa Send Files.

விநாயகர் அடியார்களே! கும்பளாவளைப்பிள்ளையார் கோயில் அளவெட்டி 1948ம் ஆண்டு யாழ்மாவட்ட நீதி மன்றால் 74A என்ற வழக்கு இலக்கத்தின் தீர்வுப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வழக்கின் தீர்வின் முழுவிபரமும் ஆலயதல வரலாற்று நூலிலோ அல்லது 2002 ஆம் வெளியிடப்பட்ட கும்பாபிஷேக மலரிலோ காணலாம். மேற்படி தீர்வின்படி இவ்வாலயம் உபயகாரர்களால் மட்டும் தெரிவு செய்யப்படும் ஏழு தர்மகாத்தாக்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு பொறுப்புரிமை அளிக்கப்படுகிறது. அந்தக்காலத்தில் ஆலய பூசகர்களுக்கு உரித்தான வருமானங்கள் தவிர்ந்த ஏனைய எல்லா (அசைவுள்ள, அசைவற்ற) வருமானங்களையும் பெற்று ஆலயத்திற்கு வேண்டிய எல்லாச் செலவுகளையும் பாரம்பரிய வழிமுறைகளுக்கு அமைய செலவுகளையும் செய்ய வேண்டும். எனவே பொறுப்புள்ள ஏழு [...]" />

கும்பளாவளைப்பிள்ளையார் கோயில் தர்மகர்தாக்கள் சபை

Cincopa video hosting solution for your website. Another great product from Cincopa Send Files.

விநாயகர் அடியார்களே!
கும்பளாவளைப்பிள்ளையார் கோயில் அளவெட்டி 1948ம் ஆண்டு யாழ்மாவட்ட நீதி மன்றால் 74A என்ற வழக்கு இலக்கத்தின் தீர்வுப்படியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வழக்கின் தீர்வின் முழுவிபரமும் ஆலயதல வரலாற்று நூலிலோ அல்லது 2002 ஆம் வெளியிடப்பட்ட கும்பாபிஷேக மலரிலோ காணலாம்.
மேற்படி தீர்வின்படி இவ்வாலயம் உபயகாரர்களால் மட்டும் தெரிவு செய்யப்படும் ஏழு தர்மகாத்தாக்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு பொறுப்புரிமை அளிக்கப்படுகிறது. அந்தக்காலத்தில் ஆலய பூசகர்களுக்கு உரித்தான வருமானங்கள் தவிர்ந்த ஏனைய எல்லா (அசைவுள்ள, அசைவற்ற) வருமானங்களையும் பெற்று ஆலயத்திற்கு வேண்டிய எல்லாச் செலவுகளையும் பாரம்பரிய வழிமுறைகளுக்கு அமைய செலவுகளையும் செய்ய வேண்டும்.
எனவே பொறுப்புள்ள ஏழு தர்மகர்த்தாக்களைத் தெரிவு செய்வதற்கு உபயகாரர்களாகிய நீங்கள் பொதுக்கூட்டத்திற்கு சமூகம் கொடுத்து ஆவன செய்ய வேண்டியது உங்களது தலையாய கடமையாகும். ஆனால் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு தங்களது விபரங்கள் (உதாரணம், விலாசம், தொ.பேசி இலக்கங்கள்) தெரியாமல் இருக்கின்றது. விபரங்களை கூடிய விரைவில் தெரியப்படுத்துவீர்கள் என்றால் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கு இலகுவாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள்களும் அவ்விடத்து விலாசம், தொலைபேசி இலக்கங்களைத்தந்தால் இலகுவாக இருக்கும். மேலும் தங்களது உபயத்தை தங்களுக்குப்பின் யாருக்கு உரித்துடையது என்பதையும் தாங்கள் உபயசம்பந்தமாக பங்குபற்றாதுவிடத்து தங்களது இடத்திற்கு யார் பங்குபற்றுவார்கள் என்பது எழுத்து மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துவதுடன் தொடர்பு கொள்ள உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்தினால் ஆவன செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்பதும் தாங்கள் அறிந்ததே.
சந்தாப்பணம் செலுத்தாதவர்கள் தங்கள் சந்தாப்பணத்தைச் செலுத்து தங்கள் உறுப்புரிமையைப் பேணிக்கொள்ளவும்.
இத்துடன் இவ்வாலயத்தில் பல திருப்பணி வேலைகள் செய்யவேண்டியிருக்கின்றது. அவற்றையும் மற்றும் விபரங்களையும், www.alaveddy.ch என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆலயத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம் என்பதை அன்பாகத் தெரியப்படுத்துகின்றோம்.
பற்றுச்சீட்டுப் பெறப்படும் எவ்விதமான கொடுப்பனவுகளுக்கும் அல்லது ஹற்றன் நஷனல் வங்கி நடைமுறைக்கணக்கு இலக்கம் 117010003914 இல் செலுத்தப்படும் கொடுப்பனவுகளுக்கும் தர்மகர்தாக்கள் சபை பொறுப்பாக இருக்கும் என்பதையும் அன்பாகத் தெரியத்தருகின்றோம்.

எமது ஆலயத்தில் பின்வரும் திருப்பணி வேலைகள் செய்ய வேண்டியுள்ளதால் இத்திருப்பணிகள் நிறைவேற ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
1. அன்னதான மண்டபம், திருமணமண்டபம் அமைத்தல்
2. உள்வீதிக்கு விடப்பட்ட இடங்களுக்கு மாபிள் பதித்தல்
3. அனல்காற்றை வெளியேற்றுவதற்கான காற்று வெளியேற்றும் காற்றாடிகள் பொருத்துதல்.
4. வாகனங்கள் பழுதுபடாமல் மூடிவைப்பதற்கென ஒவ்வொரு வாகனத்திற்கும் புறம்பான பெட்டிகள் செய்தல்
5. ஆலய எல்லைகளை நிர்ணயம் பண்ணி மதில் அல்லது வேலி அமைத்தல்
6. தேர் முட்டியில் வெளியார் உட்புகாமல் ஏற்ற ஒழுங்குகள் செய்தல்
7. தேர் உற்சவத்தன்று நடைபெறும் பண்ணிசையையோ அல்லது வேறு தினங்களில் நடைபெறும் விசேட நிகழ்ச்சிகளோ விநாயகரைப்பார்த்து செய்வதற்கு ஏற்ப திறந்தமேடை அமைத்தல்
8. ஆலய மடப்பள்ளிக் கிணற்றுக்கு மோட்டார்பம்பியும், நீர்த்தாங்கியும் அமைத்தல்
9. ஒலிபெருக்கிச் சாதனங்களை வைத்து இயக்கக்கூடிய அறை ஒன்று ஆலய உள்வீதியில் அமைத்தல்
10. மகோற்சவ காலத்தில் மகோற்சவக்குரு தங்குவதற்கு ஏற்ப வசதிகளுடன் ஒரு அறை அமைத்தல்.
11. ஆலய தரிசனத்திற்கு வருபவர்கள் தற்காலிகமாகத் தங்கி இருப்பதற்கான அறைகள் அமைத்தல்
12. கோபுரத்திற்கும், தேர்க்கொட்டகைக்கும் இடிதாங்கி அமைத்தல்
கும்பழாவளைப்பிள்ளையார் ஆலயத்திற்கு பொருள் பணம் (பூசைகளுக்கு உரியவை போக) பெறுவதற்கு தர்மகர்த்தாக்கள் சபையே அதிகாரம் உடையது. எந்தவிதமான கொடுப்பனவிற்கும் (பொருள், பணம்) தவறாது பற்றுச்சீட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வங்கி மூலம் பணம் அனுப்புபவர்கள் ஹற்றன் நஷ்னல் வங்கி சுன்னாகம் நடைமுறைக்கணக்கு 117010003914 என்ற கணக்கிற்கு அனுப்பி அதை தர்மகர்த்தாக்கள் சபைக்கு அறிவித்தால் பற்றுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
நன்றி
சா.உருத்திபசுபதி
செயலாளர்,
கும்பளாவளைப்பிள்ளையார் கோயில் தர்மகர்தாக்கள் சபை

Leave a Response