நிலாக்காலத்தில் இந்திய இசைக்கலைஞா்
மகாஐன சபை கலைஞா் வட்டத்தினா் மாதாந்தம் நடாத்தும் நிலாக்காலம் கலைநிகழ்வுகளின் ஆனி மாத கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மூத்த நாடக கலைஞா் அமரா் சின்னவி அருள் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளின் அனுசரனையில் நடைபெற்ற இந் நிலாக்காலம் நிகழ்வுக்கு சங்கீத பூசணம் வி.கே. நடராஐன் தலமை தாங்கினார். திருமதி பிரசாந்தி நந்தகுமாரின் இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை திரு.வி.சிவராஐா வழங்கினார். தொடா்ந்து இந்திய இசைவித்துவான் சங்கீதரத்தினா இளம் இசைத்தென்றல் நெடுமறம் முத்தழகின் இசை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு அணிசெய் கலைஞா்களாக வயலின் வித்துவான் அ.ஜெயராமன் மிருதங்கம் கி.அனந்தகோபன் கடம் தி.வரோதயன் மோர்சிங் எஸ்.செந்தூரன் கெஞ்சிரா திரு.எஸ்.நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனா். இந்திய இசைக்கலைஞா் முத்தழகை சங்கீத பூசணம் வி.கே.நடராஜா பொன்னாடை போர்த்து வாழ்த்து பா பாடிகௌரவிக்க மகாஐன சபை தலைவர் வை.சுப்பிரமணியம் மலா்மாலை அணிவித்து கௌரவித்தார். தொடா்ந்து மூத்த இசைநாடக கலைஞா் தைரியநாதன் நெறியாள்கையில் அளவை முருகானந்தன் குழுவினா் வழங்கிய பூதத்தம்பி இசை நாடகம் நடைபெற்றது.

நடிகமணி வி.வி. வைரமுத்து அவர்களின் பின் இசைநாடகத்துறையை வலுப்படுத்திவருபவர்களுள் திரு. தைரியநாதன் முக்கியமானவர். அவரது புதல்வர்களும் அவருக்கு பக்கபலமாக இருப்பது சிறப்பு.
இந்த பூதத்தம்பி நாடகத்தை எனது ஏழு எட்டு வயதில் (1968) அளவெட்டி பெரியதம்பிரான் கோவிலில் பார்த்த நினைவு. அந்த காட்சிகள், திரைகள் மட்டும் நினைவில் எஞ்சுகின்றன. இசைநாடகங்களை இப்போதும் மேடையேற்றுகின்ற துணிவு பாராட்டுதற்குரியது. கலைஞர் தைரியநாதனுக்கும் பக்கபலமாக நிற்கும் கலைஞர்களுக்கும் வாழத்துக்கள்.
தங்கள் கருத்துக்கு நன்றி மனோ அண்ணா. இந் நாடகத்தில் திரு.தைரியநாதன் அவர்கள் அழகவல்லி பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதுமட்டுமன்றி ஏனைய நாடகங்களைப் போலன்றி பூதத்தம்பி நாடகம் எமது மண்ணில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அந்த வகையிலும் பெறுமதிமிக்கது.மேலும் திரு.தைரியநாதன் அவர்களை மக்கள் களரி எனும் சிங்கள நாடக அமைப்பு அண்மையில் கௌரவப்படுத்தியிருந்தது.