அளவெட்டி கும்பழாவளைப் பாலர்கல்விச்சோலை வருடாந்த விளையாட்டுப் போட்டி 2010
அளவெட்டி கும்பழாவளைப் பாலர்கல்விச்சோலை வருடாந்த விளையாட்டுப் போட்டி 2010
அளவெட்டி கும்பழாவளை பாலர் கல்விச் சோலையின் வருடாந்த விளையாட்டு விழா ஆலய தொண்டர் சபைத் தலைவர் திரு.செ.சனந்தன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மக்கள் வங்கியின் மானிப்பாய்க் கிளை முகாமையாளர் திரு.செ.கந்தசாமியும் ஏனைய விருந்தினர்களாக கிராமசேவையாளர் திரு.ந.முருகதாஸ் ஓய்வுபெற்ற தபாலதிபர் திரு.வி.மருதலிங்கம் ஆலய தர்மகர்த்தாசபைத் தலைவர் திரு.ம.பத்மநாதன் சதானந்தா வித்தியாசாலையின் அதிபர் திருமதி.சொ.சிவரூபி வைத்தியகலாநிதி கெ.இந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கான மாணவர்களுக்கான பரிசில்களை கட்டடப் பொருள் வாணிபர் திரு.சி.நவநீதன் வழங்கியிருந்தார். நிகழ்வுக்கான ஆசியுரையை ஆலய பிரதமகுரு பிரம்மஸ்ரீ சோ.குமாரதாஸக்குருக்கள் வழங்கியிருந்தார். மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளுடன் பழைய மாணவர்களின் இசையும் அசைவும் பெற்றோர்கள் மற்றும் நடுவர்கள் தொண்டர் சபை உறுப்பினர்களுக்கான நிகழ்வுகளும் இடம்பெற்றன.






































































































































































