அளவெட்டி அபிவிருத்தி மன்றம் – மொழித்திறன் வகுப்புக்கள்
அளவெட்டி அபிவிருத்தி மன்றம் – மொழித்திறன் வகுப்புக்கள்
அளவெட்டி நலன்புரிச் சங்கம்- சுவிஸ் மற்றும் லண்டன் மக்கள் சங்கம் என்பனவற்றி்ன் அனுசரணையுடன் அளவெட்டி அபிவிருத்திமன்றத்தினால் நடாத்தப்படும் கீழ்வரும் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
01. ஆங்கில மொழி வகுப்புக்கள்
02. சிங்கள (பேச்சு சிங்களம்) மொழி வகுப்புக்கள்
03. கணனி அடிப்படைக் கல்வி (Basic Computer skills ) வகுப்புக்கள்
மேற்படி மொழித்திறன் வகுப்புக்கள்
• தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான வகுப்புக்கள்
• க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான வகுப்புக்கள்
• இளைஞர், யுவதிகளுக்கான வகுப்புக்கள்
என தனித்தனிப்பிரிவுகளாக நடைபெறும் இளைஞர், யுவதிகளுக்கான பாடநெறிகள் ஓகஸ்ட் மாதம் முதலாம் வாரத்திலும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடநெறிகள் மற்றும் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடநெறிகள் செப்டம்பர் மாதம் முதலாம் வாரத்திலும் ஆரம்பமாகும்.
• பயிற்சி வகுப்புக்கள் அளவெட்டி மகாஜனசபை திருமணமண்டபத்தில் மாலை நேர வகுப்புக்களாக நடைபெறும்.
• பதிவுக்கட்டணமாக ரூபா100.00 அறவிடப்படும். பாடநெறிக்காக கட்டணங்கள் எவையும் அறவிடப்படமாட்டாது.
• அளவெட்டிப் பிரதேசத்தினை வதிவிடமாகக் கொண்டவர்களும் அளவெட்டிப் பிரதேசப் பாடசாலைகளில் கல்வி கற்கும் 2010ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் 2010ம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் இப்பயிற்சி நெறிகளுக்காக விண்ணப்பிக்க முடியும்.
• குறித்த எண்ணிக்கைக்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் நேர்முகத்தேர்வின் மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இப்பயிற்சி நெறிகளில் இணைந்து கொள்ள ஆர்வமுடையோர் கீழுள்ள மாதிரிப்படிவத்திற்கு அமைவாக விண்ணப்பங்களைத் தயாரித்து தமது பிரிவு கிராம அலுவலரிடம் தமது பாடசாலை அதிபரிடம் 09.08.2010 திகதிக்கு பிந்தாமல் ஒப்படைக்கவும்.
தபால் மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர்
வே.சிவராஜா
இணைப்பாளர்- மொழித்திறன் வகுப்புக்கள்
அளவெட்டி அபிவிருத்தி மன்றம்
மகாத்மா வீதி,
அளவெட்டி மத்தி – அளவெட்டி எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.
மாதிரி விண்ணப்ப படிவம்
முழுப்பெயர் : …………………………………………………
தபால் முகவரி : …………………………………………………
தொலைபேசி இல ……………………..
விண்ணப்பிக்கும் பாடநெறி : ஆங்கில மொழி /சிங்கள மொழி/கணனி அடிப்படைக்கல்வி
விண்ணப்பிக்கும் பிரிவு : இளைஞர்,யுவதிகள்/தரம் 05 மாணவர் /க.பொ.த.உயர்தர மாணவர்
………………………..
விண்ணப்பதாரர் கையொப்பம்
