முல்லை அரச அதிபராக அளவெட்டி மைந்தன்
முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக அளவெட்டியைச் சேர்ந்த திரு.நா.வேதநாயகன் பதவியேற்றுள்ளார். இவர் பண்டிதர் க.நாகலிங்கத்தின் மூத்த மகனாவார். வன்னிப் பகுதியில் ஏற்பட்ட பேரவல நிலையின் போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக இவர் மக்களுக்கு பெரும் பணியாற்றியிருந்தார். பின்னர் விடுதலைப் புலிகளுக்கு துணை புரிந்தாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டு தற்போது முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபராக பதவியேற்றுள்ளார் .
