நாகவரத நாரயணர்

நாகவரத நாராயணர் ஆலயம்
சங்கானை – வல்லை வீதியில் அளவெட்டிக் கிராமத்தின் மேற்குப்புறமாக அளவெட்டி அருணாசலம் வித்தியாசாலைக்குச் செல்லும் வழிக்கு எதிராகச் செல்லும் ஒழுங்கையில் சுமார் 300 யார் தூரத்தில் ஸ்ரீ நாகவரதநாராயணர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. வைணவ சமயத்தின் சிறப்புக்களையும் அளவெட்டி மக்களது பக்தியையும் மேன்மைப்படுத்து வதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாமே வந்தமர்ந்து அருள்பாலித்துகு; கொண்டிருக்கும் திருத்தலமே இதுவாகும்.

அருட்கவியரசு கலாநிதி. சீ. விநாசித்தம்பிப் புலவரால் ஸ்தாபிக்கப்பட்ட இத்திருத்தலம் அமைந்திருக்கின்ற இடமானது ஆரம்ப காலங்களில் பற்றைகளும் பாம்புப் புற்றுக் களும் நிறைந்து விளங்கியது. இவ்விடத்திற்கு அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சினர். ஆனால் 1950களில் அருட்கவி ஐயா அவர்கள் பணங்கொடுத்து அந்த நிலத்தை வாங்கினார். அங்கே ஒரு கிணறும் அதன் அருகில் பாம்புப் புற்றின் மேலிருந்த சூலத்தையும் கண்ணுற்று அதற்குக் கொட்டிலமைத்து ஆதரிக்கத் தொடங்கினார்.

அருட்கவி ஐயா அவர்கள் தெய்வீக அருள் கைவரப் பெற்றவர் என்பதனால் பின்னர் நிகழப்போகின்றவைகளை நன்குணர்ந்து சிறிய ஆலயமாக அமைத்து அதனை நாகவரதநாராயணர் என்ற பெயரில் பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பரிபாலித்து வந்தார். காலப்போக்கிலே தனது உத்தியோ கத்தின் மூலம்கிடைத்த வருமானத்தை ஆலயப் புனருத்தாரணப் பணிகளுக்குச் செலவிட்டு 1980களில் தற்போது அமைந்தி ருக்கும் வைணவ ஆகம முறைக்குட்பட்ட திருச்சந்நிதானத்தை உருவாக்கி குட முழுக்கும் செய்து வைத்தார். ஆரம்பத்தில் ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தில் பொங்கல் படைத்து வழிபாடு செய்து வந்தமையால் தற்பொழுது வருடாந்த மகோற்சவத்தில் தேர் உற்சவம் ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்திலேயே நடைபெற்று வருகிறது. ஆலயத்திலே மூலமூர்த்தியாக நாகவரதநாராயணர் இருந்தாலும் சுற்றுப் பரிவாரங்களிலே அவரவர் இஷ்ட தெய்வங் களாகிய ஆஞ்சநேயர்ää துர்க்கைää சனிஸ்வரன்ää மகாலஷ்மிää முருகன்ää நடேசர்ää வைரவர்ää கணபதி ஆகிய தெய்வங்களுக்குரிய சந்நி தானங்களும் அமைந்துள்ளன. உட்பிரகாரம்ää வெளிப்பிரகாரம் ஆகிய இரண்டு பிரகாரங் களைக் கொண்டு விளங்கும் இவ்வாலயத்தில் அருட்கவி ஐயாவின் காலத்தில் நிகழ்ந்த திருப்பணிகள் எண்ணற்றவை.
1) புதிய சித்திரத்தேர் அமைப்பும் தேர் முட்டி உருவாக்கமும்.
2) ஆலய முகப்பில் மேற்கொள்ளப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள்.
3) வெளிப்பிரகார விஷ்தீரணம்.
4) ஆலயத்திற்கான பௌதீக வளக் கொள்வனவுகள்.
5) புதிய வாகனங்கள் உருவாக்கப்பட்டமை.
6) தொண்டர் சபையின் உருவாக்கம்.
ஆகியவை இவ்வாறு குறிப்பிடக்கூடிய சில நன் முயற்சிகளாகும். அம்பிகையின் அருள் பெற்ற அருட்கவி அவர்கள் ஆலயத்தில் பல அருட்செயல்களை நிகழ்த்தியிருக்கின்றார்.

1) நான்கு வயதுள்ள துரைச்சாமி சிவசுதன் என்ற சங்கானையைச் சேர்ந்த சிறுவன் இறந்துவிட்டான். வைணவ சமய பக்த ராகிய அவனது தந்தை அவனது உடலை நேரடியாக வைத்தியசாலையில் இருந்து கொண்டுவந்து ஆலயத்திற் போட்டு கதறியழுதார். காலநேரப் பூஜை வழிபாடு களை நிறைவு செய்து அருட்கவி அவர்கள் வந்து விபரத்தைக் கேட்டுவிட்டு தீர்த் தத்தை எடுத்து பையன் மீது தெளித்துவிட்டு வீடு கொண்டு செல்லுங்கள் எனக் கூறினார். உடனே பையனும் தூங்கிவிட்டு எழுபவன் போலே எழுந்தமை ஊர் மக்கள் யாவரும் அறிந்த அற்புதமே.
2) ஆலயத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு அருகில் இருக்கின்ற சிவப்பு மலர் பூத்த மந்தாரை விருட்சம் அருட்கவியின் வேண்டுதலால் வெண் மலர் பூத்தது. இன்றும் வெண்மலரே பூக்கின்றது.

3) அம்பிகையின் தூபியிலிருந்து கடும் கோடை காலத்திலே ஒரு வார காலத்திற்கு ஆகாயத் தீர்த்தம் வடிந்தோடியது. அதனைப் பலர் எடுத்துச் சென்று தீராத நோய்களையும் தீர்த்தனர்.

4) புரட்டாதி மாத சங்காபிஷேகத்திற்கு எங்கும் தேடியும் கிடைக்காத பலாப்பழம் கொக்குவிலில் ஒரு வீட்டிலிருந்து ஒரு அன்பர் மூலம் கிடைக்கப்பெற்றது. அதனைக் கொண்டுவந்து கொடுத்தவர் திருமதி. ஞானாம்பிகை சோமசுந்தரம்.

5) திருமணமாகியும் பத்து வருடங்களாக சந்தான பாக்கியம் இல்லாத பெண்ணொ ருத்தி தற்கொலைக்கு முயன்று உறவி னர்களால் காப்பாற்றப்பட்டு ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டாள். காலைப் பூஜை யில் தன் குறையைச் சொல்லி அழுது போது அவளுக்கு அடுத்த வருடமே புத்திரபாக்கியம் நாராயணர் அருளால் கிடைத்தமையும்ää இப்பெண்ணைப் போன்றே இன்னும் பல பெண்கள் சந்தான விருத்தியை இவ்வாலயத்தில் வழிபட்டுப் பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு புராண காலத்தில் சிறப்புப் பெற்று விளங்கிய தென்னிந்தியää வட இந்தியத் திருத்தலங்களைப் போன்று அற்புதங்கள் பல நிகழ்ந்த திருத்தலமாக நாகேஸ்வரம் நாக வரதநாராயணர் தேவஸ்தானமும் விளங்கு கின்றது.
தொகுப்பு :
ப. இராதாகிருஷ்ணசர்மா