அருணோதயா ப.மா.ச கனடா

அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினரால் இன்று வரை கல்லூரிக்கும் ஊருக்கும் செய்து கொடுக்கப்பட்ட செயற்திட்டங்களின் விபரங்கள் தொடர்பாக அதன் தற்போதைய தலைவர் திரு.சி.கந்தசாமி எமது இணையத்தள ஆசிரியருக்கு தபால் மூலமாக அனுப்பி வைத்த அறிக்கை

 1995 ம் ஆண்டு இடம்பெயர்ந்த கல்லூரி மீண்டும் அளவெட்டிக்குத் திரும்பி இயங்கத் தொடங்கிய போது ஏற்பட்ட கல்லூரியின் அவசரத் தேவையான நீர் விநியோகத்தை மேற்கொள்ளும் பொருட்டு நீர் இறைக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுத்து செயற்பட வைத்தமை – ரூபா 124000.00

 நூலகத்துக்கு தேவையான தளபாடங்கள் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தமை ரூபா 138000.00

 உதைபந்தாட்ட வீரர்களுக்கு தேவையான சீருடை காலணி முதலிய வாங்கிக் கொடுத்தமை ரூபா 50000.00

 விளையாட்டு மைதானத்தை விரிவுபடுத்த மைதானத்துக்கு அருகாமையில் உள்ள ஒன்பது பரப்பு காணி வாங்கிக் கொடுத்தமை ரூபா 300000.00

 நீண்ட காலமாக கல்லூரிக்கு தேவையாக இருந்த சைவம் நவரத்தினத்தின் காணியை வாங்கி அதனுள் இருந்த வீடு கிணறு முதலியனவற்றை புனரமைத்து சுற்று மதில் கட்டி கல்லூரியுடன் இணைத்த செலவு ரூபா 13,000,00.00 இப் பணிக்கு அளவெட்டி வாசியான இளைப்பாறிய தபால் இலாகா அத்தியட்சகர் மறைந்த திரு.ஆ.பொன்னம்பலம் அவர்களின் ஞாபகமாக $10,000 அவரது குடும்பத்தினரால்; கொடுக்கப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

 கல்லூரியில் நிலவிய ஆசிரியர்களின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 7 தொண்டர் ஆசிரியர்களை நியமிக்கச் செய்து அவர்களுக்கு கொடுப்பனவாக வருடா வருடம் ரூபா 100,000.00 தை கடந்த எட்டு வருடங்களாக இன்று வரை கொடுத்து வருகின்றோம்.

 இன்றைய காலத்தில் கல்வி கற்பதற்கு மிக அத்தியாவசியமாக அமைந்து விட்ட கணணி அறிவை எமது கல்லூரி மாணவர்களும் பெற வேண்டும் என்ற அவாவினால் 10 கணணிகளும் அவற்றை செயற்பட வைத்து பாவனைக்கு கொண்டு வரத் தேவையான உதிரிப் பாகங்களையும் மென் பொருட்களையும் கொள்வனவு செய்த செலவு ரூபா 400,000.00 இக் கணணிகளை பல சிரமங்களுக்கு மத்தியில் தம்முடன் எடுத்துச் சென்று கல்லூரியில் இணைத்துச் செயற்பட வைத்து உதவிய எமது சங்க உறுப்பினர்களான அரவிந்தன் ரமணண் சகோதரர்களுக்கு எமது சங்கம் நன்றிக் கடன்பட்டுள்ளது.

 அளவெட்டி அரசினர் வைத்தியசாலையை விஸ்தரித்து புனரமைக்கும் வேலைகளுக்காக எமது சங்கத்தால் கொடுக்கப்பட்ட தொகை ரூபா 9.5 இலட்சம். மேற் குறிப்பிட்ட செயல் திட்டங்களையெல்லாம் வெற்றிகரமாக செய்து முடிக்க மனம் கோணாமல் முன்வந்து பொருள் உதவி செய்த எமது சங்க அங்கத்தவர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் எமது சங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது.

 இதைவிட எமது கல்லூரி பலைய மாணவர் சங்கம் அமைக்கப்படாத நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது பழைய மாணவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களையும் எமது தேவைகளுக்க உதவ உந்து கோலாகவும் எமது சங்கம் செயல்பட்டது என்பது மிக முக்கியமானது. இவர்களுள் அவுஸ்திரேலியாவில் வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு.சு.சுந்தரேஸ்வரன் அவர்கள் எமது கல்லூரிக்கு தனது சொந்தச் செல்வாக்கினால் செய்து கொடுத்த செயல் திட்டங்களும் நிதி உதவியும் நன்றியுடன் நினைவு கூரப்படவேண்டியதொன்றாகும்.