அளவெட்டி நலன்புரிச் சங்கம்

அளவெட்டி நலன்புரிச் சங்கம் சுவிற்சர்லாந்துக் கிளையானது அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினூடாக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றது. கிராமத்தின் இளைஞர் யுவதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் கணணிக் கற்கைகளை இலவசமாக வழங்குவதற்கான நிதியுதவியினை அளித்து வருகின்றனர். வருடா வருடம் சுவிற்சர்லாந்தில் அருணோதயம் எனும் கலை நிகழ்வையும் நடாத்தி கிராமத்தின் உறவுகள் அனைவரையும் ஒன்றாக சந்திக்க வழி செய்வதுடன் அந்நிய நாட்டில் எமது பண்பாட்டைப் பேணவும் பணி செய்து வருகின்றது. கடந்த வருடம் அருணோதயம் எனும் பெயரில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை வழிகாட்டி நூலொன்றை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.எமது கிராமத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும் தமது சிறப்பான பங்களிப்பினை நல்கி வரும் இச் சங்கத்தின் செயற்பாடுகள் அளப்பரியன. கல்வி சுகாதாரம் கட்டட நிர்மானம் என பல்வேறு பணிகளிலும் தம்மை ஈடுபடுத்தி வரும் இச் சங்கத்தின் தலைவர் திரு.செல்லத்துரை சிவபாலன் அவர்களது தொடர்புக்கான முகவரி

Sellathurai-Sivabalan
The President
Alaveddy Nalanpuri Sangam
Neuedorfstr 30
8135 Langnau a/A
Swiss
0041 79 259 99 44
arunothayam @hotmail.com