எம்மைப்பற்றி

எங்கள் இணையத்தளத்துக்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எங்கள் ஊரின் பழமையையும் செழுமையையும் காப்பது எங்கள் கடமை எனும் மகுட வாக்கியத்துடன் இயங்கும் இவ் இணையத்தளம் எமது அளவையூர் உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக அமையும் என நம்புகின்றோம்.

எந்த விதமான அரசியல் நோக்கமும் அற்று தனியே எமது கிராமத்தின் நலனை நோக்கியே எமது இணையப் பயணம் நீள்கின்றது.

இடப்பெயர்வு கோலத்தால் உலகின் எட்டுத் திசைக்கும் எட்டமுடியாத திசைக்கும் தொலைந்து போன பிரிந்து போன எமது அளவெட்டி உறவுகள் அனைத்துக்குமான பொதுவான முகவரியாக இவ் இணையத்தளம் இருக்க வேண்டும் என்பதே எமது அவாவாகும்.

எமது கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து தருவதும் தேவைகளை இனம் கண்டு தெரிவிப்பதும் எமது முக்கிய பணியாக விரிகின்றது.

அத்துடன் எண்ணற்ற கலைஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் கல்வியலாளர்கள் எனப் பலரைக் கொண்ட எமது கிராமத்தின் புகழ் உலகம் வியந்து நிற்பது.

“மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என நம் ஊர் கவிஞர் மகாகவி கூறியது போல் மீளவும் நாம் எமது ஊரின் பெருமையை எழுத்துக்களால் மெருகூட்டுவோம். எனவே திசை பிரிந்து வாழும் எமது உறவுகள் தமது ஆக்கங்களை எமக்கு அனுப்பினால் அவை எமது ஆசிரியர் குழாமினால் பரிசீலிக்கப்பட்டு பிரசுரிக்கப்படும்.

பிரசுரிக்கப்படும் ஆக்கங்களுக்கும் அவற்றின் கருத்துக்களுக்கும் சம்மந்தப்பட்ட ஆக்க கர்த்தாவே பொறுப்பாவார்.

இவ் இணையத்தளத்தில் வெளியான விடயங்களை மீள் பிரசுரம் செய்ய எமது முன் அனுமதி பெறப்படவேண்டும்.

எமது தொடர்புகளுக்கு……..

நிர்வாக இயக்குனர்

sivabalan

திரு.செல்லத்துரை சிவபாலன்

arunothayam@hotmail.com

பிரதம ஆசிரியர்

sarveswara

திரு.இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா

r.sarveswara@gmail.com

இணை sivarajaஆசிரியர்

திரு.வேலாயுதம் சிவராஜா

easvies@gmail.com

துணை ஆசிரியர்

puveenthan

செல்வன்.குணசிங்கம் புவீந்தன்

puvee2125@yahoo.com

துணை ஆசிரியர்

thana
செல்வன்.செ.தனறாஜ்

s.thanaraj15@gmail.com