இறுவெட்டு வெளியீட்டு விழா

அளவெட்டி மண்ணிண் மைந்தர் திரு.மாணிக்கம் சத்தியமூர்த்தி அவர்கள் இசையமைத்துப் பாடிய ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய சிறுநண்டு மணல் மீது எனும் இறுவட்டு வெளியீட்டு விழா 10.02.2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கலாபூசணம் திரு.எஸ்.குகதாசன் தலமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சமூகவியல் துறையின் வாழ்நாள் பேராசிரியருமான கலாநிதி என்.சண்முகலிங்கன் கலந்துகொள்ளவுள்ளார். கௌரவவிருந்தினராக அளவை இசைக் கலைமன்றத்தின் தாபகர் சங்கீதபூசணம் வி.கே.நடராஐா கலந்துகொண்டு வாழ்த்துரையை வழங்கவுள்ளார்.  இந் நிகழ்வில் கலைஆர்வலர்களை கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

சிறுநண்டு மணல்மீது பாடலின் காணொளி வடிவம் 

Advertisement

Comments are closed.