இளையோருக்கான கிண்ணம் வென்றது தெல்லிப்பளை கலையொளி..!

ஞான வைரவர் விளையாட்டுக் கழகம் நடாத்திய இளையோருக்கான மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியில் தெல்லிப்பளை கலையொளி சம்பியனானது. கழக மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அளவெட்டி பாரதிதாசன் விளையாட்டுக்கழகமும் தெல்லிப்பளை கலையொளி விளையாட்டுக்கழகமும் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கலையொளி அணி 6 ஓவர்கள் முடிவில் 5 இலக்குகளை இழந்து 43 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து இலக்கை துரத்திய பாரதி கழக அணி 6 ஓவர்களில் 5 இலக்குகளை இழந்து 21 ஓட்டங்களை மட்டுமே பெற்று, 22 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக கலையொளி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் 11 ஓட்டங்களையும் பந்துவீச்சில் 3 இலக்குகளையும் கைப்பற்றிய தயுஸ்ரன் தெரிவானார்.

Advertisement

Comments are closed.