துடுப்பாட்ட போட்டியும் பரிசளிப்பு விழாவும்.

அளவெட்டி மத்தி வி.க மற்றும் அளவெட்டி ஞானவைரவர் வி.க மோதும் வலி வடக்கின் போர் (22/4/17) சனிக்கிழமை தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரி மைதானத்தில் பி.ப 2.00மணிக்கு சி.டிலக்சன் (தலைவர் -அளவெட்டி மத்தி வி.க) த.சிறிரஞ்சன்(போசகர் அளவெட்டி ஞானவைரவர் வி.க) தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிக்கு பிரதம விருந்தினரராக திரு.சு.முரளிதரன்(உதவி அரச அதிபர்-யாழ் மாவட்டம்)
சிறப்பு விருந்தினர்களாக திரு.ச.சஜீவன் (முன்னாள் வலி வடக்கு உப தவிசாளர்) மற்றும் திரு ம.மணிசேகரம் (மகாஜனா கல்லூரி அதிபர்) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .வலி வடக்கின் இரண்டு துருவங்களும் பயிற்சி ஆட்டங்கள் நுட்பமான போட்டி வியூகங்கள் கடுமையான பயிற்சிகள் என இரண்டு அணிகளும் தயார்நிலையில் உள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களை அளவெட்டி மத்தி அணியா??இளம் வீரர்களை கொண்ட அளவெட்டி ஞானவைரவர் வி.க அணியா வெற்றியடைய பெறப்போவது. விறுவிப்பான வலி வடக்கின் போர் போட்டியை கண்டுகளிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

 

Advertisement

Comments are closed.