ஞானவைரவர் விளையாட்டு கழக 2017 விளையாட்டுவிழா

அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு போட்டி 01.05.2017 திங்கள்கிழமை கழகத்தின் தலைவர் திரு.செ.சாரங்கன் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட உதவிப்பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வராவும் சிறப்பு விருந்தினர்களாக வலிவடக்குப் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் திரு.ச.சஜீவன் மற்றும் தெல்லிப்பளை பொலிஸ்நிலைய உப பொறுப்பதிகாரி திரு.சி.நிதர்சனும் கௌரவ விருந்தினர்களாக அளவெட்டி வடக்கு கிராமசேவையாளர் திரு.க.கணேசதாஸ் மற்றும் பெரியதம்பிரான் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.பொ.இரங்கநாதனும் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Advertisement

Comments are closed.