அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் தொண்டர்சபை வைரவிழா மலர் வெளியீடு, பிள்ளையார் புதிய தேர் வெள்ளோட்டம்

அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் கோயில் தொண்டர்சபை வைரவிழா மலர் வெளியீடு இன்று இரவுத்திருவிழா முடிவடைந்ததும் நடைபெற திருவருள் கூடியுள்ளது. இன் நிகழ்வினையும், சப்பறத்திருவிழா அன்று நடைபெறவுள்ள பிள்ளையார் புதிய தேர் வெள்ளோட்டமும்  இங்கு நேரலை மூலம் பார்ப்பதற்கு முடியும்.

கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் தொண்டர் சபையின் 60 ஆவது ஆண்டு (1956-2016) நிறைவை ஒட்டி (04.06.2017) இன்று மாலை 9.00 மணியளவில் எம்பெருமான் வீதி உலா வந்ததன் பிற்பாடு தொண்டர் சபைத் தலைவர் திரு.செ.சனந்தன் தலைமையில் ஆலய முன்றலில் வைரவிழா மலர் வெளியீடு இடம்பெற உள்ளது. இவ் விழாவின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்களும் சிறப்பு வவிருந்தினராக செஞ்சொற் செல்வர் திரு.ஆறு.திருமுருகன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சிறப்பு கலை நிகழ்ச்சிகளாக K.P குமரனின் நாத சங்கமம் இடம்பெற உள்ளது.
வாத்திய கலைஞர்கள்
வயலின் -S.கோபிதாஸ்
தவில் -P.விபூர்ணன்
தபேலா -S.விமல்சங்கர்
கீபோட் -S.மைக்கல் சாள்ஸ்
ஒக்ரபாட் -V.பானு
பேஸ்கிற்றார் -S.மயூரன்
இவர்களுடன் சக்தி super star winners singer குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறும். இந் நிகழ்ச்சியில் விநாயகப் பெருமான் அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

Advertisement

Comments are closed.