யாழ். அளவெட்டி தடுவான் கலட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பித்துரை(துரை) அவர்களின் பாசமிகு மனைவியும், லதீபா, கஜதீபன், சசீபா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர் மகாஜனா கல்லூரி), மல்லிகாதேவி(கனடா), றஞ்சிதமலர்(இலங்கை), இந்திரவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவபாலன், குஜிந்தர், மகிந்தகோபு, தயாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கரத்தினம் மற்றும் வள்ளியம்மை, தெய்வேந்திரம், தர்மராஜா, இந்திராணி, ராமநாதன்(கனடா), ரவீந்திரமூர்த்தி(இலங்கை), ரவீந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அத்சயன், சாருஜா, துவஸ்ரிகா, ஆரன், ஆருகன், கேதீஸ், அனோமிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|