மகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு கனடாவின் உதவி

அளவெட்டி மகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை தனது உதவியினை நல்கி இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததாக அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினர் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளனர். குறிப்பாக மகாஜன சபை வளாகத்துக்கு பின்புறமாக அமைந்திருந்த வெற்றுக்காணியை கனடா வாழ் அளவெட்டி மைந்தர் திரு.எஸ்.சிவகுமார் அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து கொள்வனவு செய்து அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை மூலமாக அளவெட்டி மகாஐன சபைக்கு நன்கொடையளித்திருந்தார். அத்துடன் புதிய கட்டடத்தின் பிரதான மேடையை அமைக்கும் பொறுப்பையும் அருணோதயக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை யினர் பொறுப்பெடுத்ததுடன் அதற்கென இலங்கைப் பணம் ரூபா 25 லட்சத்தை அண்மித்த தொகையை அன்பளிப்பும் செய்திருந்தனர் எனவும் அளவெட்டி அபிவிருத்தி மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலண்டன் மக்கள் சங்கத்தினர் தமது பங்களிப்பாக இலங்கைப் பணம் ரூபா 40 லட்சத்தை வழங்குவதற்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில் அப் பணத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே வழங்கியுதவியதாகவும் மேலும் தமது நன்கொடையை அதிகரித்து வழங்க் பரிசீலிப்பதாகவும் அபிவிருத்தி மன்றத்தினர் தெரிவித்துள்ளதுடன் மகாஜன சபை கட்டட புனரமைப்பு வேலைகள் துரித கதியில் நடைபெறுவதாகவும் இவ் வருடத்துக்குள் வேலைகளைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Comments are closed.