யாழ். அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாட்சாயணி செல்லத்துரை அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா(விதானையார்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வறஞ்ஜினி, செல்வறாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லையீஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(பெற்றோலியக் கூட்டுத்தாபனம்), கெங்காதரன், செல்வநாயகி, சுபாஜினி, சசிதரன், கலாநிதி, காலஞ்சென்ற பகீரதன், ஞானகணேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரன்(சுவிஸ்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஹிசாயினி, கிஷாந், சாயிந், டிலான், பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.