உழவு கலப்பை

விவசாயி ஒருவர் நிலத்தை உழும் காட்சி

விவசாயி ஒருவர் நிலத்தை உழும் காட்சி

பாரம்பரியமாக எமது விவசாயிகளினால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலத்தை பதனிடுவதற்கு பயன்படும் கருவியாகும். உழுதல் எனும் செயற்பாடு மூலமாக இரண்டு எருதுகளை (எருத்து மாடு) பயன்படுத்தி விவசாயி ஒருவர் நிலத்தை உழும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள். உழுவதற்கு பயன்படும் கலப்பையின் அலகும் இங்கு காட்டப்பட்டுள்ளது. உழவு நடைபெறும் போது மண் நன்கு பதப்படுத்தப்படுவதுடன் இதன் பின்னர் அந் நிலம் உழவு சால் எனவும் அழைக்கப்படும். இக் கருவி நெல் விதைத்தல் செயற்பாட்டின் போதும் “லாம்புதல்” எனப்படும் மண்ணையும் நீரையும் பயன்படுத்தி நிலத்தை மிருதுவாக்கும் முறையிலும் பயன்படுகின்றது. ஆனால் அண்மைக்காலமாக உழவு இயந்திரங்களின் ஆதிக்கம் கலப்பைகளை காணாமல் போகச் செய்து வருகின்றது.
(படமும் கருத்தும் சர்வேஸ்)

Advertisement

Comments are closed.