சற்குணசிங்கம் சுவாமிகள்

Linga_dwsசைவப்பாரம்பரியத்தில் வளர்ந்த கதிர்காமுச் சட்டம்பியார் என்பவரும் அவர் மனைவியும் அளவெட்டி வடக்கில் வாழ்ந்தவர்கள். கிறிஸ்தவப் பாடசாலையில் கல்வி பயிற்றும் தொழிலைப் பெறுவதற்காகக் கிறிஸ்தவர் களாக மதம் மாறியவர்கள். அவர்கள் பெற்ற ஒரேயொரு மகனே சற்குணசிங்கம். இவர் பூர்வஜென்ம புண்ணிய பலத்தினால் தாய்ää தந்தையர் வழி மதத்தைச் சேராமல் சைவ சமயத்திலே பெருவிருப்புடையவராய் வாழ்ந்து வந்தார். இவருடைய விவேகம்ää நுண்ணறிவு ஞாபகசக்தியென்பன இளமையிலே இவருடன் தொடர்புடையோரால் விதந்து பேசப்பட்டுள்ளது.

இவர் கல்லூரிப் படிப்பில் அதிக சிரத்தை காட்டவில்லையென்றும் சைவ நூலாராய்ச்சி யிலும் சற்குருநாட்டத்திலுமே ஆர்வங்காட்டி னாரெனவும் கூறுவர். இவர் சட்டக்கல்லூரியிற் பயின்றவரெனவும் சர்வகலாசாலைக் கல் லூரியில் பயிற்றப்பட்ட திறமை வாய்ந்த ஆங் கில ஆசிரியராக பன்னிரண்டாண்டுகள் வரை பணி புரிந்தவரெனவும் அறியவருகின்றது. சட்டக்கல்லூரிப்படிப்பை இடை நிறுத்தினாரோ அல்லது தொழில் புரியாத சட்டத்தரணியாக இவர் இருந்தாரோவென்பது எமதறிவுக்கு எட்ட வில்லை. ஆங்கில மொழியியலில் பெரும் விற்பன்னர் என்பதை அவருடன் பயின்றோர் வாய்க் கேட்டுள்ளோம். இவர் தமிழ்மொழி அறிவு மிகப் பெற்றவர் என்பதனை இவர் இயற்றிய சந்தானாசாரியர் புராணம் சொல் லும். அப்புராணம் இவரது மரபுக்கவி பாடும் வன்மையையும் எடுத்துப் பேசும். “சுத்தாத்துவ சித்தாந்த வைதிக பேரருள்நெறி” என்னும் கட்டுரை இவருடைய சமய அறிவைத் தெரிந்து கொள்ள உதவும்.

1895ம் ஆண்டில் உதித்த இவர் 1956ம் ஆண்டு சிவபதம் அடைந்தார். அறுபத்தொரு ஆண்டுகள் மட்டும் இப் பூவுலகில் வாழ்ந்த சுவாமிகள் சிவத்தொண்டு தமக்குப் பின் தமது தொண்டர்கள் மூலம் பரவவேண்டுமென்னும் பெருவிருப்பால் அளவெட்டிக் கிராமத்தில் ‘திருவடி நிழல்’ என்னும் நிலையத்தைத் தாபித்தார். இவர் கல்விகற்கும் போதே ஆனைக் குட்டிச் சுவாமி என்னும் குருவை அடைந்து அவருக்குச் சீடராகி வாழ்ந்தாரெனவும் பின்னர் கொழும்புத்துறை சிவயோகர் சுவாமிகளையும் அடைந்து அருள்பெற்றார் எனவும் கூறப்படுகிறது. ஆனைக்குட்டிச் சுவாமிகள் மேல் இவர் பாடிய அருட்பாடல்கள் ஆனைக் குட்டிச்சுவாமிகள் சிவனது அவதாரமேயெனச் சிவசத்தர் கருதினார் என்பதைத் தெளிவாக எடுத்தியம்புகின்றன. இதற்குச் சான்றாக அவர் பாடல்களில் ஒன்று காட்டு வோம்.

“அம்பலத்தே கூத்தாடு மப்பன்தானே
ஆணி நதியும் பிறைமுடியும் மகற்றி மேலாம்
உம்பருல கிழிந்துமண்மே லுலகோர் காண
ஓர் மனித உருவெடுத்து உவகை யோடு
வம்பவிழும் மார்க்கோதை மடவார் சேரும்
மணிமாடக் கொழும்பகர் வந்து லாவிக்
கம்பிதத்தோ டடியருரை செய்யு மானைக்
குட்டியென ஒருநாமம் கவினச் சாந்தி”

இப்பாடலில் “கனகசபையின் நடனமிடும் சிவன் தான் கங்கா நதியையும் பிறை பொருந் திய முடியையுந் துறந்து தேவருலகில் நீங்கி மண்ணுலகிலுள்ளோர் காணுமாறு ஒருமனித உருவெடுத்து வாசனை விரிகின்ற மலர்மா லையை அணிந்த மகளிர் சேர்ந்துள்ள அழகிய மாடங்களையுடைய கொழும்பு நகரிலே வந்து பயபக்தியோடு அடியார்கள் ஆனைக்குட்டி சுவாமியெனச் சொல்கின்ற ஒரு பெயரை அழகுறப்பூண்டு….” என்பதால் இவ்வுண்மை புலப்படும். ஆனைக்குட்டிச் சுவாமிகள் மேல் இவர் பாடிய பாடல்கள் இவர் ஒரு வரகவியென் பதை எடுத்துக் கூறுவனவாயுள்ளன. இக் காலத்தில் பல வெண்பாக்கள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இறந்தோர் நினைவாக வெளியிடப்படும் சிறு வெளியீடுகளிலும் திதி வெண்பா என்ற பெயருடன் வெளிவருகின்றன. இவற்றில் பல தமிழ் இலக்கண மரபைச் சீர்குலைப்பனவாயுள்ளன.

தம்மைப் பெரும் புலவர் எனக்கருதி நூல்களை வெளியிடுவோர் பாடல்களிற் கூட வெண்பாக்கள் சரியாக அமைவதில்லை. அவற்றுக்கு மதிப்புரை வழங்குவோரும் அப் பிழையான பாடல்களைப் புகழ்ந்து பேசக் கேட்கிறோம். சுவாமி சிவசத்தருடைய பாடல்கள் வெண்பா இலக்கணம் சிறந்தமைய இயற்றப்பட்டிருப்பதைத் தமிழார்வலர்கள் கவனித் துத் திருந்தவேண்டும். நேரிசைää இன்னிசை வெண்பாக்களில் ஒன்றில் பதினான்கு தளை கள் உள. இத்தளைகள் வெண்சீர் வெண்டளை களாகவேனும் இயற்சீர் வெண்டளைகளாகவேனும் அமையவேண்டும். பிற ஆசிரியத்தளை கலித்தளை என்பன இடம்பெறலாகாதென்பது யாப்பிலக்கணகாரர் தரும் கட்டுப்பாடான ஆணை. இதனை மீறுவோர் பாக்கள் மரபு பற்றிய வெண்பாக்களாகா. சுவாமி சிவசத்தர் பாடிய வெண்பா ஒன்றைத் தருவோம். அது மரபு வழுவாது இருப்பதை வாசகர்கள் காண்பாராக. அவ்வெண்பா

“சித்தத் தெழுமொளியைச் சித்தாந்தத்துட் பொருளை
முத்தைப் பவளநிற மெய்சுடரை – முத்திக்கு
வித்தாகி யென்றுளத்தே மேவுங் குருநாளை
எத்தால் மறப்பே னினி”
என்பது இவ்வெண்பா
இலக்கணம் முற்றும் நிரம்பியிருப்பது காண்க.

சிவசத்தர் எழுதிய சந்தனாசாரியர் புராணம் அல்லது கயிலைப்புராணம் என்னும் நூல் சந்தான குரவர் குருபூசை நடக்குமிடங்களில் புராணபடனஞ் செய்வதற்கு வாய்ப்பான நூலாகும். கயிலைப்புராணத்தில் அன்பர்கள் சேர்ந்து வெளியிட்டுள்ள ‘சுத்தாத்விதசித்தாந்த வைதீக சைவப் பேரருள் நெறி’யென்னும் சமயக் கட்டுரை கல்லூரிகளிற் சைவசமயப் பாடம் கற்பிக்கும் எல்லாருக்கும் பயன்படக்கூடிய சிறப்புற்றது. எனவே கயிலைப் புராணத்தை அண்மையில் வெளியிட்ட திருவடி நிழல் தொண்டர்கள் ஒவ்வொரு பாடசாலையும் இந் நூற் பிரதிகளைப்பெற ஆவன செய்வார்களாக.

பண்டிதர்.க.நாகலிங்கம்

Advertisement

Comments are closed.