காவியங்களில் மட்டுமேஅவளை என்னால் சந்திக்க முடிகிறது !
மனித வாழ்க்கையில் சந்திக்க நேரும்
போது வணங்கத்தான் தோன்றுகிறது
அவளின் முத்து முத்தான புன்னகையும்
கார்மேகக் கூந்தல் அழகும ;என்னை கவி பாட வைத்து !
சொந்தமாகும்வரைஎன்னை பித்துப் பிடித்த பித்தனாக்கி
என் சித்தத்தையும் குளிரவைத்து
என் இதயத்தின் திறவுகோலாய்
அவள்தான் இதயத்தை திறந்த விந்தை என்ன?
என்னால் நம்பக்கூட முடியவில்லை
விரிந்து சாத்தப்பட்ட யன்னல் கதவுகள்
அவள் அகலக் கரங்களால் திறந்தது போது
அற்புதமான அந்தரம்மியமான அதிகாலை பொழுதில் !
கதிரொளிகளை அள்ளி வீசிய ஆதித்தியன்
உதயம் அவள் விழிகள் !
மூன்றாம் பிறைநெற்றியில் கருநிறச் சாந்துப் பொட்டிட்ட
அதிகாலை மலர்வதனம் அவள் அன்பு முகம் !
துள்ளித் திரிந்த புள்ளிமான் பருவத்து மங்கை அவள் !
அழகுவதனம் என் இதயத்தினுள் !
வெள்ளித் தட்டினிலே வெள்ளை மனதுடன்
வெள்ளை ஆடையுடன் பள்ளிப் புத்தங்களை அள்ளி
அரவணைத்து பள்ளி சென்ற காலத்தில் !
துளைத்தெடுக்கும் அம்புகளின் கடைகண் பார்வையில்
கண்டேன் அவளை என் இதயத்து வாசலில்!
அள்ளி அணைத்து அன்னம் மூட்டியதாயா இவள் !
சிலவினாடிகள் பார்க்கும் போது வியக்க வைக்கும்
நந்தவனக் குயில் அவள் !
உலகின் விந்தையே?அல்ல அதிசயப்பிறவியா?
கணையொடு விழிகளை அவள் பக்கம் செலுத்தி
உன்னைச் சந்திப்பேன் என்று கூறமால் கூறி
அந்தராத்தமான என் மனதில் அலையாய் வீசியது!
ஏன் மனம் அவளை நெருங்கää நெருங்க என்னை
உரிமையாக்கி விழுங்கிவிடப் போகிறான் என்ற
அவளின் இதயம் படபடப்பில்
ஒரு இணைப்பு வேண்டுமே என்ற மன்றாட்டத்துடன்
வேண்டிக் கொண்டது அவள் மனம்!
ஐயத்து அவள் உம்ääஉம்ääஉம்ääசம்மதம் தெரிவித்தது
ஏன் இதயத்தைக் கவ்விக் கொண்டது.!
சிறிநவரத்தினம் (சுவிஸ்)