மாட்டு வண்டில்

எங்கள் மண்ணிண் பரம்பரை போக்குவரத்துச் சாதனம். அந்த நாள்களில் வல்லிபுரக் கோவில் செல்வச்சந்நிதி முருகன் கோவில் தில்லையம்பலப் பிள்ளையார் என தொலைவிலுள்ள பிரபல கோவில் திருவிழாக்களுக்கு சொந்தம் பந்தம் எல்லாம் சேரந்து பயணிக்க பயன்பட்ட போக்குவரத்து சாதனமாக மாட்டுவண்டில் திகழ்ந்தது. அப்போது இயல்பாக ஏற்பட்ட போட்டித் தன்மை பின்பு முறைமைப்படுத்தப்பட்டு மாட்டு வண்டில் சவாரிகளாக உருப்பெற்றது. தினகரன் வீரகேசரி போன்ற பத்திரிகைகள் அதனை ஊக்குவிக்கும் வகையில் பல போட்டிகளை நடாத்தத் தொடங்கின. இவ்வாறு தோற்றம் பெற்ற மாட்டு வண்டில் சவாரியில் நம் அளவெட்டியைச் சேர்ந்த பலர் தடம் பதித்து தனித்துவம் பெற்ற விற்பன்னர்களாக இத் துறையில் திகழ்ந்தனர். குறிப்பாக சைலர் சின்னத்தம்பி இவ்வாறு அறியப்பட்ட ஒருவர். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் மகேந்திரன் மற்றும் முத்தையா சேனாதிராசா, சந்திரன் சிவஞானம் சகோதர்கள் என்பவர்கள் இத்துறையில் பிரபலம் பெற்ற இரண்டாம் தலைமுறையினராக திகழ்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையில் சேனாதிராசா துசிகரன்,கோபாலு கணாதீபன்,ஞனேந்திரன் கஜன் ஆகியோர் இன்றும் இத்துறையில் ஈடுபடும் இளைய தலைமுறையினராகவுள்ளனர்.

Advertisement

Comments are closed.