திருமணமண்டபம் திறந்து வைக்கப்பட்டது

kumpalavalaiஅளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட திருமணமண்டபம் கடந்த 19.08.2016 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. ஊர் பொது மக்களின் நிதியுதவியுடன் அமைக்கப்பெற்ற இம் மண்டபத்தை யாழ்.மாவட்ட அரச அதிபர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். கும்பழாவளைப் பிள்ளையார் கோவில் தர்மகர்த்தாசபைத் தலைவர் திரு.ம.பத்மநாதன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா மற்றும் வைத்தியகலாநிதி கெ.இந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலை நிகழ்வுகளாக கும்பழாவளை பாலர் கல்விச் சோலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களின் நடன நிகழ்வுகளும் சங்கீதபூசணம் வி.கே.நடராஐா அவர்களின் இசைக் கச்சேரியும் நடைபெற்றன.

Advertisement

Comments are closed.