ஆறுப்பிள்ளை மாஸ்ரர் காலமானார்

aruஅளவெட்டியின் புகழ் பூத்த ஆசிரியர்களுள் ஓருவரான ஆறுப்பிள்ளை மாஸ்டர் இன்று காலமானார். அருணோதயக் கல்லூரியில் நீண்ட காலம் கற்பித்த இவர் கணிதம் மற்றும் தமிழ் பாடங்களில் புலமைமிக்கவராகத் திகழ்ந்தார். தமிழ் மரபு சார்ந்த கவிதைகளைப் படைப்பதிலும் ஆற்றல் உள்ளவராகத் திகழ்ந்தார். அமரரின் இறுதிக் கிரியைகள் அளவெட்டி டச்சு வீதியில் அமைந்துள்ள அமரரின் இல்லத்தில் நடைபெறும். அமரருக்கு அளவெட்டி மக்கள் சார்பில் எமது அஞ்சலிகளைத் காணிக்கையாக்குவதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அளவெட்டி கிராம இணையத்தளம் சார்பில் தெரிவித்து நிற்கின்றோம்.

Advertisement

Comments are closed.