Posts

கலைத்துறை மாணவர்களுக்கு கதவடைக்கும் பல்கலைக்கழக கற்கைநெறிகள்

இ.சர்வேஸ்வரா விரிவுரையாளர் கல்வியியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சுருக்கம் 2023/2024 கல்வியாண்டு தொடக்கம், முன்னர் கலைத்துறை மாணவர்களுக்கு அனுமதிவழங்கப்பட்ட நான்கு கற்கைநெறிகளுக்கு முற்றாக விண்ணப்பிக்க முடியாதவகையில் அனுமதித் தேவைப்பாடுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இக் கற்கைநெறிகளுக்கான மொத்த அனுமதிகளின் எண்ணிக்கை 483 ஆகும். அத்துடன் முன்னர் விண்ணப்பிக்க கூடியதாகவிருந்த இரண்டு கற்கை நெறிகளுக்கு கலைத்துறை மாணவர்கள் 2023ஃ2024 கல்வியாண்டுக்கு பின்னர் விண்ணப்பிப்பதாயின் கட்டாயமாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை உயர்தரத்தில் தெரிவுசெய்யவேண்டியுள்ளது. இத் துறைகளுக்கான மாணவர் அனுமதி 635 ஆகும். […]

கும்பழாவளைப்பிள்ளையார் மஹோற்சவம் -2023 நேரலை

கும்பழாவளைப்பிள்ளையார் மஹோற்சவம் -2023 நேரலை பகல் திருவிழா காலை 08.30 மணிமுதல் 1.30 மணிவரையும் இரவுத் திருவிழா மாலை 06.00 மணிமுதல் 10.00 மணிவரையும் நேரலையாக ஒளிபரப்பாகும் (12 நாள்திருவிழவும் ஒளிபரப்பாகும்) கீழே உள்ள இணைப்பை அழுத்துவதன்(click the link) மூலம் நேரலைகளை பார்வையிட முடியும். திருவிழா நேரலையை பார்வையிட இங்கே அழுத்தவும்(click here)

திருவடி நிழல் மடாலயம் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி

ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம கோயில் மகா கும்பாபிஷேகம்

அளவெட்டி ஶ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம வரலாறு யாழ்பாணத்து மாமுனிவர் சிவ யோகசுவாமிகளின் கொழும்புத்துறை ஆச்சிரமத்துக்கு 1949 ஆம் ஆண்டு வைகாசி தினத்தன்று ஒர் அமெரிக்க இளைஞர் வந்தார்.அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த யோகசுவாமிகள் அவருக்கு சுப்பிரமுனியசுவாமிகள் எனும் நாம தீட்சை அளித்தார் அவரே நமது குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள். தான் இலங்கைக்கு வந்து தங்கியிருந்த அளவெட்டி கிராமத்தில் சிவயோக சுவாமிகளின் ஆசியுடன் ஸ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமத்தினை ஸ்தாபித்தார். இன்று உலகளாவிய ரீதியில் சிவப்பணி ஆற்றிவரும் ஹாவாய் சைவ ஆதீனம், […]

திருவடி நிழல் மடாலயம் புனர்நிர்மானம் தொடர்பாக உதவி கோரல்

திருவடி நிழல் மடாலயம் புனர்நிர்மானம் தொடர்பாக உதவி கோரல் திருவருள் முன்நிற்க அன்புடையீர், திருவடி நிழல் ஆச்சிரமம் சைவ வாலிப சங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. அவ் மடாலயத்தின் மூலஸ்தான கட்டிடம், கிணறு, நடேசர் மடம் முதலியவற்றில் பலத்த சேதங்கள் காணப்பட்டன. அவற்றை திருத்தும் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருத்துவதற்கு உத்தேச மதிப்பீட்டு கூலிகள் 265,000.00 ரூபாவும் பொருட்கள் 350,000.00 ரூபாவும் மொத்தமாக 615,000.00 ரூபாவும் தேவைப்படுகின்றது. தற்போது திரு.இ.நாகேந்திரம் 100,00.00 ரூபாவும் திரு.வ.நல்லதம்பி 100,000.00 ரூபாவும் திருமதி.சு.நடேசராணி […]

மரண அறிவித்தல் திருமதி.சாந்தநாயகி சுப்பிரமணியம்

அஞ்சலிகள் திருமதி.சாந்தநாயகி சுப்பிரமணியம் அளவெட்டி மகாஜன சபை தலைவர் திரு.வை.சுப்பிரமணியம் (வையன்னா பாலு) அவர்களது மனைவி திருமதி சாந்தநாயகி காலமானார். திரு.வை. சுப்பிரமணியம் அவர்களது தீவிர சமூக பணிகளுக்கு துணையாக நின்ற அம்மணி. அமரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

அளவெட்டி சைவ வாலிப சங்கத்தின் நாவலர் விழா

அளவெட்டி சைவ வாலிப சங்கத்தின் நாவலர் விழா காலம் 06.02.2023 வெள்ளிக்கிழமை இடம் மகாஜன சபை மண்டபம், அளவெட்டி.

மரண அறிவித்தல் நாகலிங்கம் குலசிங்கம்

நாகலிங்கம் குலசிங்கம் தோற்றம் 20 November, 1946 மறைவு 20 December, 2022 பிறந்த இடம் அளவெட்டி மத்தி வாழ்ந்த இடம் சீமா வளவு அளவெட்டி சீமா வளவு அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குலசிங்கம் அவர்கள் இன்று (20.12.2022) செவ்வாய்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற வசந்தாதேவியின் அன்புக் கணவரும் மற்றும் இராசலட்சுமியின் அன்புச் சகோதரரும்,  விஜஜா,  அகிலன்,  விஜிதா, மாதவன்,  திலீபன்,  ஆகியோரின் […]

மரண அறிவித்தல் திருமதி.மருதலிங்கம் திலகவதி

திருமதி.மருதலிங்கம் திலகவதி தோற்றம் 08.04.1949 மறைவு 12.12.2022 அளவெட்டி மத்தி சதானந்தா வீதி வதிவிடமாக கொண்ட ஒய்வுநிலை தபால்அதிபரும் சமாதான நீதவானுமாகிய வயித்தியவிங்கம் மருதலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி மருதலிங்கம் திலகவதி அவர்கள் 12.12.2022 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் அமரர் நாகராசா சின்னம்மா தம்பதியினரின் மகளும் மருதலிங்கம் அவர்களின் துணைவியாரும், கணேசலிங்கம்(பாதுகாப்பு உத்தியோகத்தர்) ,வசந்தி , அமரர் சண்முகலிங்கம்(சண்) அவர்களின் பாசமிகு தாயாரும், சிவானந்தன் விஜயகுமாரி(பட்டு) ஆகியோரின் மாமியாரும் சர்மிளன், யஸ்மின் அபிலக்சிகா வைஸ்ணவன் ஆகியோரின் […]

Green layer அமைப்பினருக்கு நன்றி பாராட்டல்

Green layer அமைப்பினரின் உதவியுடன் 24-09-2021 இன்று கும்பழாவளைப்பிள்ளையார் ஆலய சூழலில் நாட்டப்பட்ட மரங்களுக்கு அளவெட்டி கும்பழாவளைப்பிள்ளையார் ஆலய தர்மகத்தா சபையினர் மற்றும் தொண்டர் சபையினர் நன்றிகளை தெரிவிக்கின்றனர். அத்துடன் இவ்வமைப்பின் பணிகள் மேலும் சிறப்புற நடைபெற  கும்பழாவளைப்பிள்ளையார் அருள் கிடைக்க வேண்டுகின்றனர்.