வெளிவயல் மாரியம்மன்

புண்ணிய பூமியாகிய ஈழவள நாட்டில் யாழ்ப்பாணப் பகுதியில் கலைச் செல்வமும் தெய்வீகச் செல்வமும் நிலவளம் நீர்வளங் களும் நிறைந்து விளங்கும் எம் அளவெட்டி கிராமத்தின் தென்பால் வயற்கரை ஒரத்தில் மணிவண்ணக்கோயில் கொண்டு கொலு வீற்றிருக்கிறாள் ஸ்ரீ முத்துமாரியம்மை.

இவ்வாலயத்தின் பூர்வ வரலாறு மிக அற்புதமானது. சுமார் 250 ஆண்டுகட்கு மேற்பட்ட புராதனமுடையது. நோய் நீக்கி பேய் நீக்கி இஷ்ட சித்திகள் கொடுத்து தொண்டர்களுக்கு உறுதுணைத் தாயாக விளங்குகின்றாள் எம் அம்பிகை.

மாகியம்பிட்டி சண்டிலிப்பாயைச் சேர்ந்த அங்கணம்மைக் கடவை என்னும் மேட்டு நிலத்தில் ஆலமர நிழலில் பெண் கூட்டம் ஒன்று இளைப்பாற வந்தது. கடின வெய்யில்;; தாகந்தீர்க்க எண்ணினர். வயலில் உழவு செய்து கொண்டிருக்கும் மக்களை அழைத் தனர். தாகந்தீர இளநீர் தருவீர்களா? என்றனர். கமக்காரர் 3 இளநீர் மாத்திரம் தேடிப்பறித்து வந்தனர். ஆனால் அங்கே வந்தவர் 4 பேர் இன்னும் ஒரு இளநீர் இல்லையே யாது செய்வோம் என்று கமக்காரர் மனக்கவலைப்பட்டனர். “மக்களே கவலை வேண்டாம் யான் அதோ மாட்டுக்கூட்டம் நிற்குமிடம் சென்று பால் வாங்கிக் குடிப்பேன்” என்று வடக்கே சென்றார் ஒரு நரைத்தலைக் கிழவியார். அந்தக்கிழவி வந்தமர்ந்த இடம் வெளிவயல் ஓரத்தில் நின்ற ஒரு வேப்ப மரநிழல். மாட்டுக்காரன் ஒருவனை அழைத் தாள் அப்பா மகனே உனது மாட்டிலிருந்து கொஞ்சப்பால் எடுத்துத் தரமாட்டாயா? தாகந்தீர குடிக்க வேண்டும் என்றாள் கிழவி. அம்மா தாயே இங்கு பத்து வருடமாக மழை யில்லை| குளங்களில் நீரில்லை| பயிரினம் விளையவில்லை| பசும் புல்லின் நிறங்கள் கூட இல்லை. இந்நிலையில் பசுக்கூட்டம் நிற்கும் நிலைமையைப் பாருங்கள் ஆச்சிää ஈன்ற கன்றுக்கு பால் கொடுக்க முடியாமல் கன்றைப் பார்த்து தாய்ப்பசு அழுகிறது. என்ன செய்வேன் தாயே என்றான் அம்மனிதன்.

நரைக்கிழவி மிகமிக மெலிந்த பசு வொன்றைக் குறிப்பிட்டுப் பார்த்தாள்| உடனே அந்தப்பசு கொழுத்த மேனியும் – பால் ததும்பும் முலைக்காம்பும் கண்கவரும் முகப்பொலிவும் கொண்டு கிழவியாரிடம் வந்து சொந்தங் கொண்டாடியது. மடியைத் தொட்டாள் கிழவி பெருகியது பாலாறு வயிறாரக் குடித்தாள் மாட்டிடையானும் கையேந்தி வேண்டும் மட்டும் குடித்தான். உள்ளம் ப10ரித்தான். வந்தவள் மானிடப் பெண்ணல்லள் அகிலாண்டேஸ் வரியே என்று ஆனந்தக் கூத்தாடினான். கிழவியைக் காணவில்லை “ஆச்சி ஆச்சி” எங்கே போய்விட்டாய் என்று கத்தினான். திடீரெனக் காட்சி தந்தாள் எம்பெருமாட்டி. “மகனே என் பெயர் முத்துமாரி என் சகோதரி களுடனே வந்தேன் அவர்கள் அங்கணம்மைக் கடவையில் தங்கிவிட்டார்கள். அவர்கள் மீனாட்சிää நாகேஸ்வரிää கண்ணகி என்பவர்கள். யாம் திருவிளையாடலின் பொருட்டு இவ்விடம் வந்தோம் இனி மாதம் மும்மாரி பெய்து நிலவளம் செழிக்கும் நீயும் ஊராரும் என்னை ஆதரித்தால் உங்கள் குறைகளெல்லாம் தீரும்” என்று கூறி அந்தக் கிழவி மறைந்தாள். முற்பிறப்பில் பெரும் புண்ணியம் செய்த அத்தொண்டன் அந்த வேம்பின் கீழ் ஸ்ரீ முத்துமாரியை நினைத்து ப10சித்து வந்தான். அவ்விடம் காலகதியில் சிறு கோயிலாகியது. பின் கல்லாற் கட்டிய பெருங் கோயிலாகியது. அந்தக் கோயிலில் ஸ்ரீ காஞ்சிபுரத்திலிருந்து அம்பிகையின் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்கள். சுமார் 250 வருடங் களுக்கு மேற்பட்ட கால எல்லையை உடைய இவ்வாலயத்தில் முதற் கும்பாபிஷேகம் நடந்த காலம் தெரியாமலிருந்தது. பலியிடுதல்ää பொங்கல் பூசைää 8 நாள் விழாக்கள் இவை ஆனி மாதத்தில் நிகழ்ந்து வந்தன. இக்காலம் இவ்வாலய தர்மகர்த்தாவாக விளங்கும் புண்ணியவாளன் திரு.சி.சண்முகநாதன் அவர்கள் பல அன்பரின் வேண்டுகோளுக் கிணங்கி 1967 ஆம் ஆண்டு பலி நிறுத்த ஏற்பாடு செய்து எம்பெருமாட்டிக்குத் திரு வ10ஞ்சலும்ää ஊர்வலமும் மேற்கொண்டு பக்திப் பிரவாகம் சிறக்க வழி செய்தார்.

பக்தர் கூட்டம்ää தொண்டர் கூட்டம் பெருகியது. திருத்தேர்ப்பணிää தேர்முட்டிக் கட்டடம்ää புதுக்கோயில் கட்டும் பணி இவற்றைத் தொண்டர்கள் கூடி பகுதி பகுதியாக ஒப்பேற்றினர்.

அருட்செல்வி முத்துமாரிக்கு புதுக்கோயில் கட்டப்பட்டுப் கும்பாபிஷேகம் 31.08.84 வெள்ளிக்கிழமை உதயம் இனிது நிறை வேறியது. பரிவார மூர்த்திகளாக ஸ்ரீகணேசர்ää ஸ்ரீமுருகன்ää ஸ்ரீவைரவர் ஆகியோர் அமர்ந் துள்ளனர். 04.05.2001 அன்று அடுத்த கும்பாபிஷேக விழா நிகழ்ந்தது. அடியேனின் 6 மாத குழந்தைப் பருவத்தில் மரணத்தறு வாயில் இருந்த போது உயிர்ப் பிச்சை தந்த கிழவி இந்த முத்துமாரித்தாய் என என் தாயார் கூறிய வாக்கையும் அடியார்க்கு ஞாபகப்படுத்தி ஸ்ரீ முத்துமாரியம்மையின் அடியிணைகளைப் போற்றுகின்றேன்.
.
அருட்கவி. சீ. விநாசித்தம்பி