புனித சூசையப்பர்

புனித சூசையப்பர் தேவாலயம் அளவெட்டியில் இரண்டு கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் புனித சூசையப்பர் ஆலயம் மிகவும் பழமைவாய்ந்த தாகும். பழமை வாய்ந்த இந்த ஆலயம் 1700ஆம் ஆண்டின் முன்பாகக் கட்டப்பட்டது.

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயம் அரசத்தின முதலியார் என்பவருக்குச் சொந்தமான நிலத்திலே அமைக்கப்பெற்றது. இந்த நிலம் கும்பழாவளைப் பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் இருந்தது. அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயத்திலே கோவாவைச் சேர்ந்த அறுக்கஞ்சி நாடார் எனும் குருவானவர் ஒருவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

1873ஆம் ஆண்டு இக்குருவானவரின் எலும்புகள் எடுத்துவரப்பட்டு இப்போதுள்ள இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது. பழைய ஆலயத்தின் இடிபாடுகளை இன்றும் காணக் கூடியதாக உள்ளது. இப்போதைய ஆலயம் 1952ஆம் ஆண்டே கட்டப்பட்டது. வணக்கத்துக்குரிய பிதாவின் கல்லறையும் இந்த ஆலயத்தின் பின்புறமாக உள்ளது. 30 கத்தோலிக்க குடும்பங்கள் இந்த ஆலயத்திற்கு உரித்தானவர்களாக இருந்து வந்தனர். எனினும் யுத்த

church18-300x224

 அவலம் காரணமாக பலர் இடம் பெயர்ந்துபோக சிலர் மட்டுமே எஞ்சியுள்ளனர். புனித சூசையப்பர் உழைப்பாளிகளின் காவலர் ஆவார். இதனால் அவருடைய திருநாள் மே மாதம் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.

சிறிய எண்ணிக்கையிலேயே கத்தோலிக்க குடும்பங்கள் அளவெட்டியில் இருந்தாலும் இவ்வாலயத்தின் மகிமையினால் இரண்டு அருட்தந்தையரையும் ஐந்து அருட்சகோதரிகளையும் அளவெட்டிப் பங்கு தந்துள்ளமை பெருமைக்குரிய விடயமே. தற்போது இந்த ஆலயத்தின் பங்குத் தந்தையாக வணக்கத்துக்குரிய அன்ரன் புனிதகுமார் அடிகளார் திகழ்ந்து வருகின்றார்.