அளவெட்டி ஞானவைரவரது ஹட்ரிக் சாதனை…!

வலிகாமம் வடக்கு பிரதேசசெயலகத்துக்குட்பட்ட விளையாட்டு கழகங்களிற்கிடையேயான விளையாட்டுப்போட்டியில் இம் முறையும் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி மூன்றாவது தடவையாகவும்   தொடர்ச்சியாக சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. ஞான வைரவர் விளையாட்டுக் கழகம்.  இவ் வருடத்துக்கான தெல்லிப்பளை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டிகளின்  இறுதி நிகழ்வுகள் 2018/03/10 அன்று பிரதேசசெயலர் திரு ச.சிவசிறி தலைமையில் யா/அருணோதயாக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக யாழ் மாவட்ட அரசஅதிபர் திரு நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஞானவைரவர் விளையாட்டுக் கழகம்  ஏழு போட்டிகளில் முதலிடங்களையும் இரு போட்டிகளில் இரண்டாமிடங்களையும் பெற்று 84 புள்ளிகளுடன் மூன்றாவது வருடமாகவும் வலிகாமம் வடக்கின் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இரண்டாமிடத்தை கணேசன் விளையாட்டுக்கழகம் 62 புள்ளிகளுடன் பெற்றுள்ளது. 2018 இன் சிறந்த தடகளவீரராக ஞானவைரவரது வீரன் ச.யதுஷன் தெரிவுசெய்யப்பட்டார்.தொடரும் இச் சாதனைப்பயணத்தில் வெற்றிக்கு பங்களித்த அனைத்து வீரர்களிற்கும் அளவெட்டி சமூகம் சார்பில் எமது வாழ்த்துக்கள்.

Advertisement

Comments are closed.