சங்கீதவித்துவான் வி.சிவஞானசேகரம் காலமானார்

அளவெட்டி மண்ணிண் இசையாளர்களுள் ஒருவரான விஸ்வநாதன் சிவஞானசேகரம் காலமானார்.  அமரர் அருணோதயக் கல்லூரியின் முன்னாள் உப அதிபரும் கும்பழாவளைப் பிள்ளையார் தேவஸ்தான முன்னாள் தர்மகர்த்தா சபைத் தலைவரும் ஆன ஆசிரியர் விஸ்வநாதன் அவர்களின் மைந்தன் ஆவார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைத்துறையில் பட்டம் பெற்ற இவர் யாழ் பரி.யோவான் கல்லூரியில் பலவருடம் இசை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
நல்லூர் இளங் கலைஞர் மன்றத்தை பலவருடம் நிர்வகித்தவர். நல்லூர் திருவிழாக் காலத்தில் வசந்த மண்டப வாசலில் பல வருடங்களாக இசை நிகழ்ச்சியை நடாத்தியவர்.
நல்லூர் ஶ்ரீ துர்க்கா மணிமண்டபத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக மாலை இசை நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகப் பணியாற்றியவர். தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேர்த்திருவிழா நாளில் கலைஞர்களை ஒழுங்கமைத்து இசை அர்ச்சனை நிகழ்ச்சியை நடாத்தியவர். இணுவில் கந்தசாமி கோவில் இளந்தொண்டர் சபையின் இசை ஆசிரியராக பணியாற்றியவர்.
அளவெட்டி கும்பழாவளையில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பண்ணிசை மழை பொழிந்தவர். தன் இசைஆசிரியப் பணியின் மூலம் பல மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். அமரரின் மறைவுக்கு அளெவெட்டி சமூகம் சார்பில் எமது அஞ்சலிகளை தெரிவிப்பதுடன் அமரரின் ஆத்மா கும்பழாவனைப் பிள்ளையார் கழல்களை ஏக பிரார்த்திக்கின்றோம்.

Advertisement

Comments are closed.