உணர்வுகளின் சங்கமம்

அன்புடையீர் எதிர்வரும் 04.03.2017 சனிக்கிழமை காலை 11:00 மணிமுதல் அளவெட்டி நலன்புரி சங்கத்தின் உறவுகள் கூடி உறவாடும் மகிழ்வானபொழுதில் சுவிற்சர்லாந்து வாழ் அளவெட்டி உறவுகள் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். இந்தவருடம் அனைவரினதும் விருப்பத்திற்கிணங்க ஊரின் உறவுகளுடன் உறவாடி மகிழ்ந்திடும் பொழுதாக அமையவிருக்கின்றது. ஒவ்வொரு உறவுகளும் தாங்கள் தங்கள் சுயவிருப்பின் வசதிக்கேற்ப சிற்றுண்டிகள் எடுத்துவரலாம். மற்றும் மண்டபத்தில் அனைவரும் இணைந்து மதிய உணவு தயாரித்து உண்டுமகிழ்வோம். ஈழத்தமிழர்களாகிய நாம் பல இழப்புக்களின் பின்னும் தாய்மண்ணின் உணர்வோடு வாழ்ந்துவருகின்ற ஓர் சமுதாயமாகும். புலம்பெயர்வாழ்விலும் நினைவுகள் தாய்நிலம்நோக்கியே அலைபாய்கின்றது. எமது பண்பாட்டை முறையே கடைப்பிடித்துவரும் ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிபற்றி எப்போதும் சிந்திப்பவர்கள் அந்தவகையில் எம்முன்னே விரிந்துகிடக்கும் கடமைகளை சிந்தித்து எம்மால் முடிந்தவரை ஒன்றிணைந்து முயற்சிசெய்வோம்.

நடைபெறும் இடம்  Cevi- Huus,

Ackerweg 7 ,

4665 Oftringen.

Advertisement

Comments are closed.