மீண்டும் இயங்கத்தொடங்கியது முதலியவேள் சனசமூகநிலையம்

அளவெட்டி முதலியவேள் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா 2015.12.13 ஆம் திகதி வெகு சிறப்பாகநடைபெற்றது. இப்புதிய கட்டடத்தினை நிர்மாணிப்பதற்காக திரு. திருமதி.அம்பலம் சண்முகசுந்தரம் ,பரமானந்தசோதி தம்பதிகளின் சார்பில் அவர்களது பிள்ளைகள் திரு.ச.விக்னேஸ்வரன்,  திரு.ச.ஆனந்தராஜ்,திரு.ச.சோதிராஜ் ஆகியோர் 6 லட்சம் ரூபா நன்கொடையாக வழங்கியிருந்தனர் .சனசமூக நிலையத்தின் தலைவர்திரு.சி.கணேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்குமாகாண விவசாய ,கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி,  நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர்கௌரவபொ.ஐங்கரநேசன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கௌரவ சோ.சுகிர்தனும்,வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் செயலாளர் உயர்திரு.இ.அறிவரசன் அவர்களும், அளவெட்டிவடக்குகிராமஅலுவலர்உயர்திரு.க.கணேசதாஸ் அவர்களும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.

1970 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டமுதலியவேள் சனசமூகநிலையம் 1992 ஆம் ஆண்டில் அளவெட்டியில் இடப்பெயர்வு ஏற்படும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிவந்தது. பின்னர் 1998 இல் அளவெட்டியில் மக்கள் 1960 களில் ஆரம்பிக்கப்பட்ட முதலியவேள்சன சமூகநிலையம் 1992 ஆம் ஆண்டில் எமது பிரதேசத்தில் இடம்பெயர்வு ஏற்படும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிவந்தது. பின்னர் 1998 இல்மக்கள் மீள்குடியமர்ந்த பின்னர் மீண்டும் இயங்கத்தொடங்கி சனசமூகநிலையம் 2006 ஆம் ஆண்டில் எமதுநாட்டில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தொடர்ந்து இயங்கமுடியாது துரதிஸ்ட வசமாக சூழ்நிலை ஏற்பட்டது குறிப்பிடத்த்தக்கதாகும்.

Advertisement

Comments are closed.