திரு.பொன்.கணேஸ்வரன் அவர்களின் சூரபத்மன் வதைபடலம் நூற்தொகுப்பு வெளியீட்டு விழா – இலண்டன்

அளவெட்டி அழகொல்லை விநாயகர் முன்பள்ளியின் வளர்ச்சிக்கு நிதிவழங்குவதையும் , சைவஅன்பர்கள் கந்தசஹ்டி விரதகாலத்தில் படித்துப் பயன் பெறவேண்டும் என்பதையும் நோக்காகக் கொண்டு அளவெட்டியைச் சேர்ந்த அருள்நிறைச் செல்வர் பொன்னம்பலம் கணேஸ்வரன் அவர்களால்தொகுத்து வழங்கப்பட்ட சூரபத்மன் வதைபடலம் நூற்தொகுப்பு இலண்டன் மாநகரில் முதல் உதித்த சைவாலயமான உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் 20-12-2015 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுசிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இவ்வெளியீட்டு விழாவானது பிரதம சிவாச்சாரியார் சைவசிவாகம பண்டிதர் உயர்திரு சுந்தரேச விசுநாத ஐயரின் அருளுரையுடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து வெளியீட்டு உரையினை இளைப்பாறிய பொறியியல் விரிவுரையாளர், தமிழ் தொண்டர், சமூககாவலர், தெய்வத்தொண்டருமாகிய உயர் திரு.கந்தையா தியாகமூர்த்தி அவர்கள் இன் நூலின் அவசியம் பற்றியும், வருங்காலத்தில் இது ஒரு தமிழ் சமயப் பொக்கிசமாகத் திகழும் எனவும் நூலாசிரியர் திரு பொ. கணேஸ்வரன் சைவ உலகிற்கு ஆற்றியுள்ளது மிகப்பெரும் பணி என்றும் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து நூலறிமுக உரைகளை உயர் வாசற் குன்று பிரதம சிவாச்சாரியார் கற்பக விநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் உயர்.திரு வசந்தன் சிவாச்சாரியார் உயர். திரு.மகேசன் உயர்.திரு நாகநாதசிவம் ஆகியோர் இந்த நூலின் பல்வேறு சிறப்புகள் மற்றும் நூலினது தேவை என்பன பற்றிய பலவேறு அரிய கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.

இவ்விழாவின் நிறைவில் ஆலயசிவாசாரிகள் எல்லாரும் ஒன்றுகூடி சபையோரின் பலத்த கரகோசத்துடன் திரு.பொன்.கணேஸ்வரன் அவர்கட்கு பொன்னாடை போர்த்து கௌரவித்துச் சிறப்பித்தனர். புத்தக வெளியீட்டில் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்ற நிதி முழுவதும் அழகொல்லை விநாயகர் முன்பள்ளிப் பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Comments are closed.