அளவெட்டி ஞானவைரவர்விளையாட்டு கழகம் வென்றது

தெல்லிப்பளை பிரதேச கழகங்களிற்கிடையிலான குழு விளையாட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளது. பெண்களிற்கான கரப்பந்து போட்டியில் 19:25, 25:20, 25:18 என வென்றது. பெண்களிற்கான உதைபந்தாட்டப்போட்டியில் தர்மிகா,சானு ஆகியோரின் கோல்கள் மூலம் 2:0 என்ற கணக்கில் வெற்றிகொண்டது. பெண்களிற்கான துடுப்பாட்டப்போட்டியில் தெல்லிப்பளை கலைஒளி நிர்ணயித்த 56 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய எமது அணி சானு முதல் ஓவரில் ஆறு சிக்சர்களை விளாச, 3.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலகு வெற்றி பெற்றது. மூன்று இறுதிப்போட்டிகளில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது அளவெட்டி ஞானவைரவர் விளையாட்டு கழகம்.

Advertisement

Comments are closed.