சுவிற்சர்லாந்தில் அருணோதயம்- 2017

விழுதாகி விருட்சம் தாங்குவோம் வேரிழந்து அழிந்திடோம்.
அளவெட்டி நலன்புரிச் சங்கத்தின்
அருணோதயம்

எதிர்வரும் 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை 14:00 மணிமுதல் அளவெட்டி நலன்புரி சங்கத்தின் அருணோதயம் (கலைமாலை) நிகழ்வு நடைபெறவுள்ளது.  இன்நிகழ்வில் சுவிற்சர்லாந்து வாழ் அளவெட்டி உறவுகள் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். இவ்வருடம் அனைவரினதும் விருப்பத்திற்கிணங்க முத்தமிழ்விழாவாக நடைபெறவிருக்கின்றது,

ஈழத்தமிழர்களாகிய நாம் பல இழப்புக்களின் பின்னும் தாய்மண்ணின் உணர்வோடு வாழ்ந்துவருகின்ற ஓர் சமுதாயமாகும். புலம்பெயர்வாழ்விலும் நினைவுகள் தாய்நிலம்நோக்கியே அலைபாய்கின்றது. எமது பண்பாட்டை முறையே கடைப்பிடித்துவரும் ஒவ்வொருவரும் அடுத்த தலைமுறையின் வளர்ச்சிபற்றி எப்போதும் சிந்திப்பவர்கள் அந்தவகையில் எம்முன்னே விரிந்துகிடக்கும் கடமைகளை சிந்தித்து எம்மால் முடிந்தவரை ஒன்றிணைந்து முயற்சிசெய்வோம்.

அளவெட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் அருணோதயம் கலைமாலை 2017 நிகழ்வில் சுவிற்சர்லாந்துவாழ் அளவெட்டி உறவுகள் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்துசிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். இந்நிகழ்வில் அளவெட்டி உறவுகளின் தரமான கலை நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றோம். கலைநிகழ்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் 10.09.2017 முன்னர் விண்ணப்பிக்கும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
காலம்:-17.09.2017 நேரம்:-14.00 முதல்
நாம் பிறந்தமண்ணின் பெருமையை எமதுசந்ததிக்கும் எடுத்துணர்த்தும் வகையில் வருடம் ஒருமுறையேனும் ஊரின் உணர்வுடன் ஒன்றுகூடுவோம். காலம்எமக்குத்தந்த வரலாற்றுக் கடமையை சிறிதளவேனும் சிந்தித்து செயற்படுவோம். நாளைய சமுதாயம் நாம்யார் என்றதேடலுக்கு இன்றே வித்திடுவோம். உணர்வுள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து 17.09.2017 அன்று ஒன்றுகூடுவோம்.
காக்கையின் கூட்டில் குயிலின் முட்டை இனங்காணும்வரை இதனையுணர்ந்து செயற்படுவோம். நாம் முன்னெடுக்கும் முயற்ச்சிக்கு ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொருவருடமும் உங்கள் ஒத்துழைப்பை நாடிநிற்கின்றோம். எமதுசமுதாயத்தின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியத்துவம் என்பதனை மனதில்நிலைநிறுத்தி நாங்கள் பிறந்துவளர்ந்த தாய்மண்ணையுமஇ; சிந்திக்கும் அறிவை சீரமைத்து எம்மை இவ்வுலகிற்கு சிந்தனையாளர்களாகவும் அறியவைத்த பாடசாலைகளையும் சீரமைக்க எமக்குக் கிடைத்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி எம்மாலான உதவிகளை செய்வதற்கும் ஒவ்வொருவரும் இணைந்து செயற்படவேண்டுமென மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
தலைவர்
செ.சிவபாலன்

இந்தநிகழ்ச்சியில் கலந்துசிறப்பிக்க விரும்புவோர் 10.09.2017 முன்னர் விண்ணப்பிக்கும்வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்வில் அளவெட்டி உறவுகள் மற்றும் நண்பர்களின் தரமான கலை நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறோம்

காலம்;:-17.09.2017                                                          நேரம்:- 14:00
நிகழ்ச்சின் பெயர்:-………………………………………..

நிகழ்வுக்கான நேரம்:-…………………………………………

ஓலிவாங்கி தேவைப்படின் எண்ணிக்கை:-……………………….
பக்கவாத்தியம், பின்பாட்டு உண்டு இல்லை

நிகழ்ச்சித் தயாரிப்பாளர் :-……………………………………………….

தொலைபேசி ………………………………………………….

மின்னஞ்சல்……………………………………………………

நிகழ்வில் பங்குகொள்ளும் மாணவர்களின் விபரம் (முழுப்பெயர்)

தொடர்புகளுக்கு :- செல்லத்துரை சிவபாலன்

Alaveddy Nalanpuri Sangam,                      Natel :- 079 – 259  99 44

Neudorfstrasse 30,                                         மின்னஞ்சல்;  arunothayam@hotmail.com

8135 Langnau  a / A                                       இணையம்          www.alaveddy.ch

Advertisement

Comments are closed.