அப்பலோ குமாரசாமி என அழைக்கப்பட்ட அளவெட்டி தந்த மொழிவல்லுனரான திரு செ.குமாரசாமி காலமானார். அமரிக்க விண்கலம் நிலவில் தரையிறங்கிய போது அந் நிகழ்வு நேரலையாக ஒளி ஒலிபரப்பப்பட்டது. அதன்போது தமிழில் அந் நிகழ்வை அவர் வர்ணணை செய்தமையால் அப்பலோ குமாரசாமி என அழைக்கப்பட்டார். பின்பு திம்புவில் நடைபெற்ற சரித்திரப்பிரசித்தி பெற்ற பேச்சு வார்த்தையில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியமையால் திம்பு குமாரசாமி பூட்டான் குமாரசாமிஎன அழைக்கப்பட்டார். ஆங்கிலம் தமிழ் இலத்தின் சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவர். பாராளுமன்றத்தில் சமகால உரைபெயர்ப்பாளராக கடமையாற்றினார். ஓய்வுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றினார். அளவெட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்த ஆளுமைகளில் மிக முக்கியமானவர். அவருக்கு அளவை மக்கள் சார்பில் அஞ்சலிகள்.