வி.கே.நடராஜாவுக்கு சிவத்தமிழ் விருது

அளவெட்டியைச் சேர்ந்த இசைவிற்பன்னர் சங்கீதபூசணம் வி.கே. நடராஜாவுக்கு தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம் ”சிவத்தமிழ்” விருது வழங்கிக்கௌரவித்துள்ளது. இசைத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 93வது பிறந்தநாள் வைபவத்தில் வைத்து இவ் விருது வழங்கப்பட்டது. இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் திரு.க.ஸ்ரீபவன் அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து விருதை வழங்கிக் கௌரவித்தார். அந் நிகழ்வு தொடர்பான காணொளிப் பதிவைக் கீழே காணலாம்.

Advertisement

Comments are closed.