அளவெட்டி அருணாசல வித்தியாசாலை அதிபரின் அவசர கோரிக்கை

இம்மண்ணின் போற்றுதற்குரிய மைந்தன் அமரர் நாகமுத்து அருணாசல உடையார் உருவாக்கிய கலைக்கூடம் 110 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இதன் அதிபராகக் கடமையேற்று இரண்டே நாள்கள் எனினும் இதன்வரலாறு என்னை வியப்பின் விளிம்பிற்கும் இன்றைய நிலை துயரின் விளிம்பிற்கும் கொண்டு சென்றது.”  எனக்குறிப்பிட்டு அளவெட்டி அருணாசல வித்தியாசாலை அதிபர் பாடசாலையின் அவசிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அளவெட்டி சமூகத்திடம் அவசர உதவிக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் பாடசாலை நலனில் அக்கறையுள்ள நலன்விரும்பிகளின் உதவி நாடப்படுகின்றது. 13.11.2018 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட மேற்படி அறிக்கையின் முழு விபரம் வருமாறு.

அளவெட்டி கடின உழைப்பிற்கும் விவசாயத்திற்கும் மட்டுமல்ல கலைக்கும் கல்விக்கும் ஊற்றாகத் திகழ்ந்த ஒப்பற்ற பூமி. நம் முன்னோர் எதிர்கால சந்ததியின் நலன்கருதி உருவாக்கியவை ஏராளம். அசாதாரண சூழ்நிலை எம் வாழ்வாதாரத்தை சிதைத்தாலும், எம்மவரின் அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் எம்மை மீண்டெழச்செய்து வருகிறது. எனினும் இப்பிரதேசத்தின் அடையாளமாம் அருணாசலம் வித்தியாலயம் இன்னும் எம்மவர் கண்ணில் தென்படாமல் இருப்பது துயரமே.

இம்மண்ணின் போற்றுதற்குரிய மைந்தன் அமரர் நாகமுத்து அருணாசல உடையார் உருவாக்கிய கலைக்கூடம் 110 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. இதன் அதிபராகக் கடமையேற்று இரண்டே நாள்கள் எனினும் இதன் வரலாறு என்னை வியப்பின் விளிம்பிற்கும் இன்றைய நிலை துயரின் விளிம்பிற்கும் கொண்டு சென்றது.

பல கலாநிதிகளையும், அரச அதிபர்களையும் உருவாக்கிய  கலையில் – விளையாட்டில் தேசியம் கண்ட, இவ்வித்தியாலயத்தின் ஆயிரத்தைத் தொட்ட மாணவர் எண்ணிக்கை இன்று 150 ஆகக்குறைந்து,பொலிவிழந்து நிற்கிறது.

இப்பாடசாலையின் மைந்தர்கள் கடல் கடந்து பல நாடுகளில் பிரகாசிக்கின்றனர். பலர் இப்பிரதேசத்தில் செழிப்புடன் வாழ்கின்றனர், பலர் உயர்பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

அருணாசலம் அன்னையின் பழைய பொலிவினைக் காணத்துடிக்கும் உறவுகளே! உங்கள் தயவை நாடி நிற்கின்றோம். கடமை உங்களை அழைக்கிறது. காலத்தின் தேவை உணர்ந்து தமிழர் உயர் பண்பாடாம் நன்றிக்கடன் செலுத்த வாரீர். சக உறவுகளையும் விழிப்புணரச் செய்வீர்.

பாடசாலையில் இனங்காணப்பட்ட தேவைகள் – முன்னுரிமை  அடிப்படையில்.

  1. தற்போதிருக்கும் மலசலகூடங்கள் பாவனைக்குதவாத நிலையில் இருக்கின்றன. ஆண், பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனியாக, ஒவ்வொன்றேனும் விரைந்து அமைக்க வேண்டியுள்ளது.
  2. மாணவர்ககளுக்கான குடிநீர்க் குழாய்த்தொகுதி முற்றாகப் பழுதடைந்த நிலையிலுள்ளது.
  3. சுற்று மதில் இல்லாமையால் மாலை நேரங்களில் பாடசாலை வளவினுள் வெளியாரின் நடமாட்டமும் மற்றும் தகாத செயல்களும் அவதானிக்கப்பட்டுள்ளது.
  4. ஏழைப் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக கற்றல் உபகரணங்கள் அவசியமாக உள்ளன.
  5. பாடசாலைக்குப் பொருத்தமான நுழைவாயில் அமைப்பதற்கான தேவைப்பாடு உள்ளது.
  1. காரியாலயம் தற்காலத்திற்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது.
  2. கணனிகள் பழுதடைந்து 02 மட்டுமே செற்படும் நிலையில் உள்ளன. கற்றல் நடவடிக்கைகளுக்கு குறைந்தது 05 கணனிகளேனும் தேவைப்படுகின்றன.
  3. ஒளிப்பிரதி எடுப்பான் (Photo copy machine) ஒன்றின் தேவை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு அவசியமாக உள்ளது.
  4. ஒலிபெருக்கி வசதி ஒன்றை ஏற்படுத்துவதன் ஊடாக கல்விச் செயற்பாடுகள், விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் கலை நிகழ்வுகளைச் சிறப்பாக மேற்கொள்ளலாம்.

இது தொடர்பாக தங்கள் உதவியைப் பாடசாலைச் சமூகம் நாடி நிற்கிறது.

 மேலதிக விபரங்கள் மற்றும் தங்கள் அனுசரணைக்காக தொடர்பு கொள்ளுங்கள்

பாடசாலை அதிபர்        0094 76 592 2291

பாடசாலை ஆசிரியர்   0094 77 508 1616

கனடாவில்

  1. தேவந்தி (பழைய மாணவி)  416 890 8384

       2. ஞான கணேஸ்            416 272 5131

சுவிற்சர்லாந்தில் திரு. செ.சிவபாலன்  0041 792 599 944

K. Lankapradeepan

Principal

J/Vali/ Alaveddy Arunasalam Vidyalayam

Alaveddy.

 

Advertisement

Comments are closed.