அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்திற்கு கௌரவ பா.கஜதீபன் அவர்களால் பாண்ட் வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு

band-giving

மாகாண சபை உறுப்பினர்களுக்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ பா.கஜதீபன் அவர்களால் அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்திற்கு ரூபா. 50,000.00 பெறுமதியான மேலைத்தேய பாண்ட் வாத்தியக் கருவிகளும் சீருடைகளும் அன்பளிப்புச்செய்யப்பட்டுள்ளன.
மேற்படி பாண்ட் வாத்தியக்கருவிகளை சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு 2016.10.21 ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ பா. கஜதீபன் அவர்களால் பாண்ட் வாத்தியக் கருவிகள் அதிபரிடம் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
போர்க்கால அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டு நலிவுற்ற நிலையிலிருந்த இப்பாடசாலையானது பெருமளவான சவால்களை எதிர்கொண்டு பலவிதமான போராட்டங்களின் மத்தியில் மெல்ல மெல்ல வளர்ச்சிகண்டுவருகின்றது. இவ்வாறான நிலையில் கௌரவ பா.கஜதீபன் அவர்களின் இச்செயற்பாடாது தமது வளர்ச்சிப்பாதையில் வேகமாகப் பயணிப்பதற்கு உறுதுணையாக அமைந்து ஊக்கமளிப்பதாக அமைந்திருப்பாதாக பாடசாலைச் சமூகத்தினர் நன்றியுணர்வுடன் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுடன் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துசிறப்பித்தனர்.

Advertisement

Comments are closed.