அளவெட்டி நலன்புரிச் சங்கம்-சுவிஸ்

அளவெட்டி நலன்புரிச் சங்கம் – சுவிஸ் இன் தீர்மானத்துக்கும் ஆலோசனைக்கும் அமைய ஆங்கில பயிற்சி நெறியொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற் கட்டமாக அளவெட்டி அபிவிருத்தி மன்றம் விசேட ஆங்கில பயிற்சி நெறியொன்றினை நடாத்தவுள்ளது. ஆங்கில புலமை மிக்க வளவாளர்களைக் resouce persons) கொண்டு நடாத்தப்படவுள்ள. இத் திட்டத்தில் 12 வயதுக்கு கீழ்ப்பட்ட பிள்ளைகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். முதற் கட்டமாக எதிர்வரும் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவடைந்ததும் அம் மாணவர்களுக்கு இப் பயிற்சி நெறி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப் பயிற்சி நெறியினை மேற்கொள்ள அளவெட்டி நலன்புரிச் சங்கம்-சுவிஸ் நிதியுதவி செய்யவுள்ளனர்.இவர்களுக்க எமது நன்றிகளும் பாராட்டுக்களும். மேலதிக தொடர்புகளுக்கு வைத்திய கலாநிதி க.இராதேயன் தலைவர் அளவெட்டி அபிவிருத்தி மன்றம் தொலைபேசி 060 221 0260

Advertisement

Comments are closed.