நீண்ட இசைப்பாரம்பரியத்தைக் கொண்ட அளவெட்டி மண்ணிண் பெருமையை தென்னிந்தியச் சினிமாத் துறை வரை எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராக எமது இளைய இசையமைப்பாளர் நிரு திகழ்கின்றார்.ஈழத் தமிழர்களின் கதையினை மையமாக கொண்டுஉருவாக்கப்பட்ட “இராமேஸ்வரம்” திரைப்படத்துக்கு இசையமைத்து புகழ் பெற்றவர் நிரு. இவரது பல இசை அல்பங்கள் பாராட்டைப் பெற்று உலகத் திசையாவும் ஒலித்து வருகின்றன. விரைவில் எமது இணையத்தளத்திலும் அவற்றை செவிமடுக்கலாம்