இசை வகுப்புக்கள்

எமது அளவெட்டிக் கிராமம் தனது பெருமையையும் புகழையும் உலகளவில் தக்க வைத்தமையில் எமது இசைப் பாரம்பரியத்துக்கும் பெரும் பங்கு உண்டு. உலகத் தவில் மேதை தெட்சணாமூர்த்தி நாதஸ்வர மேதை கலாசூரி என்.கே.பத்மநாதன் ஆகியோரினால் எமது மண் பெற்ற பெருமை வரலாற்றில் கனதியான பக்கங்கள். ஆனால் தற்போது அளவெட்டியின் இசைத்துறை வளர்ச்சி போதுமானதாக இருக்கவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதும் முறையான கற்றலுக்கான வசதிகள் எமது பிள்ளைகளுக்கு கிடைக்காமையே அடிப்படைக் காரணியாகும். இக் குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் அளவெட்டி மகாஐன சபை கலைஞர் வட்டம் இலவச இசை வகுப்புக்களை நடாத்த திட்டமிட்டுள்ளது.
• வாய்ப்பாட்டு
• வயலின்
• மிருதங்கம்
• ஓகன்
ஆகிய வகுப்பக்களை முதற் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் தாய்நாட்டில் வாழும் நம்மால் திட்டங்களை மட்டுமே தீட்ட முடியும் ஆனால் செயற்படுத்துவதற்கான நிதி வளத்தினை பிற நாடுகளில் வாழும் எமது உறவுகளே வழங்க முன்வர வேண்டும். எனவே இத் திட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் உறவுகள் தமது கருத்துக்களை r.sarveswara@gmail எனும் முகவரிக்கு அல்லது 0778449739 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி தெரிவிக்கலாம்.

Advertisement

Comments are closed.