வாடும் வயிற்றை என்ன செய்ய
காற்றையள்ளித் தின்று விட்டு
கையலம்பத் தண்ணீர் தேட……
பக்கத்திலே குழந்தை வந்து
பசித்து நிற்குமே…- அதன்
பால்வடியும் முகம் அதிலும்
நீர் நிறையுமே……….
அதன் பால்வடியும் முகம்
அதிலும் நீர் நிறையுமே……….”
நிர்க்கதியான நிலையில் ஆண்டவனைக் கதியென்று பற்றித் தேவார திருவாசகங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்போமே, அப்படியானதொரு வேளையில் எம்மக்களுக்கான ஊட்டமாக எழுந்தவை இந்த ஈழத்து எழுச்சிப்பாடல்கள். எண்பதுகளில் விடுதலைப் போராட்ட களத்தில் எல்.வைத்யநாதன், தேவேந்திரன் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள், மற்றும் தமிழகக் கலைஞர்களோடும் இணைந்து இலேசாக அரும்பிய இந்த எழுச்சிப்பாடல்கள் தொண்ணூறுகளில் பெரும் எழுச்சியோடு வெளிவரத் தொடங்கின. நம் கவிஞர்கள், நம் பாடகர்கள், நம் இசையமைப்பாளர்கள் என்று முற்று முழுதான ஈழத்துப் பரிமாணத்தோடு வெளிவரத் தொடங்கின.
அப்போது தோன்றிய ஈழத்துப் பாடகர்களில் ஒருவர் தான், “ஈழத்து இசைவாரிதி” வர்ணராமேஸ்வரன் அவர்கள்.
மேலதிக தகவல்கள் மற்றும் ஒலி வடிவங்களுக்கு