ஓவியர் வாசுகனுடன் சில நிமிடம்……

vasukan 4பார்க்குமிடமெங்கும் தனது இனத்தின் வேர்களையும் கிளைகளையும் தேடும் இளைஞர் வாசுகன், கவிஞர்களால் நிறைந்திருக்கும் ஈழத்தமிழ் சமூகத்தில் அரிதாகவே காணக்கிடைக்கும் ஒரு ஓவியக்கலைஞன். இளவயதிலேயே ஒவியத்தில் உருக்கொண்ட இவரின் தேடல்களும் படைப்பார்வமும் நவீன ஒவியத்தில் தொட்டிலாகக் கருதப்படும் ஐரோப்பிய மண்ணிலும் தொடர்ச்சியாக இவரை இயக்கி வருவதில் வியப்பில்லை.

புகலிடக் கலைஞன் ஒருவனின் ஏக்கங்களுடன் பிரான்ஸ் மண்ணில் தற்போது வசித்துவரும் வாசுகனுடனான இவ் உரையாடல் ஒவியம் குறித்து புதிய அனுபங்களையும் புதிதாக கற்றும் கொள்ளும் வாய்ப்பையும் எமக்குத் தந்தது. காலமும் முயற்சியும் இந்த இளைஞனை இன்னும் பல உயரங்களுக்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையோடு…நேர்காணல்: ஆதவன்

***

உங்களைப் பற்றி கூறுங்கள்

எனது ஆசிரியர் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார், எனது வாழ்க்கை மின்கம்பி போன்று நீண்டுள்ளதாக. யாழ்ப்பாணம், கொழும்பு, சைப்பிரஸ், பாரிஸ் என இத்தொடரில் ஓவியங்கள் வரைவதும் தொடர்கின்றது. எனது பிறப்பிடமான ‘அளவெட்டி வடக்கின்’இயற்கையுடன் தொடங்கி ‘மாட்டினிக்’ வடபகுதியின் இயற்கைவரை சென்றுள்ளேன். இதற்கு மேலாக வரும் கேள்விகளூடு மேலும் அறிமுகங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.

நீங்கள் உபயோகிக்கும் நிறங்கள் அதன் உத்திகள் பற்றி?

vasukanவர்ணங்கள் பல வகைகள், அநேகமானவற்றை பயன்படுத்தி உள்ளேன். நீர்வர்ணம், தைலவர்ணம் போன்ற இன்னும் வேறு வர்ணங்களை உபயோகிக்கின்றேன். மேலும் வர்ண மண் துகள்களை ஒட்டுதல், ஒட்டு சித்திர முறை, மருபிலே, தையல் வேலை, சிற்பவேலை, தச்சுவேலைப்பாடுகள் என்பன ஓவியத்தில் பதிந்துள்ளன.

நிறங்கள் எனும்பொழுது எனக்கு பிடித்த ஓவியர்களில் ஒருவரான ‘ஈவ் கிளான்’ (Yves Klein, 28.04.1928 – 06.06.1962) போன்று தனியே நீல நிறத்தை மட்டும் உபயோகிக்க என்னால் முடிவதில்லை, ஒரு இயற்கை வர்ணங்களும் வெளிச்சமும் நிறைந்த சில ஓவியங்களை தவிர. எனது கலாச்சாரமும் இந்த உலகம் – எந்த எந்த ஓவியம் எவ்வகையான நிறங்களை பூர்த்தி செய்கின்றதோ அவற்றை பூசுகின்றேன், தடவுகின்றேன், மெழுகுகின்றேன்.

‘மாடிநிக்கில்’ மார்ச் 2011ல் ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தபோது தங்கி இருந்த வீடு கடற்கரையை ஒட்டி இருந்தது. அதிலிருந்த ஒரு தேக்கமர காட்சி ஒன்றை அந்த மரத்தின் தேங்காய்களில் உள்ள சாய வர்ணத்தினால் கீறி இருந்தேன். பச்சை, பச்சை சார்ந்த மஞ்சள், சிவப்பு சார்ந்த ஊதா, கறுப்புச் சார்ந்த சிவப்பு போன்றன தேக்ங்காய் மூலம் அந்த ஓவியத்திற்கு கிடைத்த வர்ணங்கள்.

ஓவியத்தில் நீங்கள் கொண்டிருந்த படைப்பாற்றல் திறமையை எப்படி இனங்கண்டு கொண்டீர்கள்?

 

ஓவியத்தின் மேலுள்ள உத்திகளை மேலும் மேலும் கண்டறிய சிறுவயதிலிருந்து எப்போதும் தேடலிலும் பயிற்சியிலும் இருந்தேன். அதோடு வர்ணங்களின் மேல் ஓர் ஈர்ப்பு இருந்து வருகிறது. ஆனால் என்னை ஒரு தகுந்த ஓவியனாக்கி ஓவிய உலகில் காலடி பதிக்க வைத்தவர் எனது ஓவிய ஆசிரியர் திரு. கிளின் கியூஸ் (Glyn Hughes 1931 North Wales). இவரே எனது படைப்பு ஆற்றலை வெளிப்படுத்தியவர். இவர் ஒழுங்குசெய்த ஓவியக் கண்காட்சியில் (1997Melina mercouri hall – Nicosia – Cyprus) பிரசித்திபெற்ற சில ஓவியர்களுடன் சேர்ந்து பங்கேற்ற பின்னரே என்னுள் இருந்த படைப்பாற்றலை மேலும் தொடர்ந்து கொண்டேன்.

ழத்தில் உங்கள் படைப்புக்களம் எப்படியிருந்தது. என்ன வகையான படைப்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்தீர்கள்?

vasukan 2படைப்புக் களத்திற்கு மேலாக போர்க்களமே அதிகமாகப் படிந்திற்று. படைப்புலகத்தின் தேடலையும், பதிவுகளையும் அழித்துவிட்டது, யாழ் நூலகம்போல. ஈழத்தின் படைப்புக்களம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு மேலாக, போர் ஈழத்தின் படைப்புக்களை பாதித்ததா? அல்லது நமது கலாச்சாரம் ஈழத்தின் படைப்புக்களை மூழ்கடித்ததா என்ற கவலை என்னிடம் மட்டும் அல்ல புகலிட ஈழத்து படைப்பாளிகள் பலரிடமும் உண்டு.

இருப்பினும் அதன் இயற்கை வளமும் போர் அனர்த்தங்களும் எனது ஆரம்ப கால சித்திரங்களில் பதிந்தது. முயற்சிக்கு மேலாகதேடல் அதிகமாக இருந்தது. மேற்கத்தேய ஓவிய பிராயத்தின் மேலும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அதற்கான ஊற்று பற்றாக்குறையாகவும் கணணி உலகம் ஆரம்பிக்காத காலமுமாக இருந்தது. கலாச்சார வர்ணங்களும் சிலை வடிப்புக்களும் ஒரு வகையான ஆறுதல் அளித்தது. ஆனாலும் எனது ஆதிமனிதன் கலையில் ஆழமாகவும் அதிசயமாகவும் ஆழ்ந்திருக்கின்றான் என்று பல ஆராய்ச்சி சான்றுகள் கூறுகின்றன. தற்போதைய விஞ்ஞான உலகம் ஆரம்பகாலத்திற்கு முன்பே பல படிமங்களை வடித்திருக்கின்றான்.

உதாரணமாக, நவக்கிரகங்கள் (சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள்) அதிலும் நடுவில் தான் சூரிய பகவான் ஆட்சி செய்கின்றான்.

புலம்பெயர் சூழலின் நாளாந்த வாழ்வுச் சிக்கலுக்குள் உங்கள் படைப்புத் தூண்டுதலை எவ்வாறு அணையாது வைத்துள்ளீர்கள்?

‘சாவிலும் வாழ்வோம்’ என்று வாழ்ந்த இனம், அதில் விடியலைத்தேடி சென்றது ஒருபகுதி, பதுங்கு குழிகளிலும் படித்து பட்டம் பெற்றவர்கள் ஒரு சிலர்.. இவ்வாறு மனித இனம் மனிதனின் மனம் ஒரு இலக்கை நோக்கியே பயணிக்கின்றது. எனது மனதிலும் ஓவியம், ஓவியம் ஊடாக மற்றும் கலை படைப்புகள் சம்பந்தமான இலக்கு, எனது மனதிலும், மூளையிலும் வர்ண படைகளாகவும், ஓவிய ஊற்றுக்களாகவும் படிந்துள்ளன என நினைக்கிறேன். இதற்கு மேலாக எமக்கான சூழலை நாம் தான் அமைக்க வேண்டும். அத்தோடு நண்பர்களும் கைகொடுப்பார்கள்.

பொங்குதமிழுக்காக இந்த நேர்காணலை வழங்க, கவிஞர் பாலகணேசன் (சுபாஸ்) பொங்குதமிழ் ஆசிரியர் குழுவுடன் தொடர்புபடுத்தியிருந்தார் இவ்வாறாக நம்முள் SKYPE மூலமான உரையாடலில் நான் எவ்வாறான உணர்வுகளில் ஓவியம் வரைந்துள்ளேன் என்பதை இரைமீட்டுக் கொண்டேன். கோபத்திலும், சோகத்திலும், மகிழ்ச்சியிலும், பிரிதலிலும், பயணத்திலும், தேடல்களிலும், ஈர்ப்பிலும், கொண்டாட்டங்களிலும், அனர்த்தங்களிலும்.. இன்னும் பல உணர்வுகளிலும் எனது விரல்களும் தூரிகைகளும் வர்ணங்களும் பதிவுகளை ஓவியத்தில் நிகழ்த்தியுள்ளன.

புலம்பெயர் வாழ்வுச் சிக்கல்கள் அனைத்தையும் ஓவியத்தில் பதிய முயற்சித்துள்ளேன்.

இவ்விடயத்தில் உங்கள் முன்னோடி, வழிகாட்டி என்று யாரையாவது குறிப்பிடுவீர்களா?

எனது குடும்பத்தினர் அம்மா, அப்பா, சத்யா, நித்திலா… முக்கியமாக எனது நல்லதொரு நண்பர், ஓவிய ஆசிரியர் மற்றும் வழிகாட்டியாக இருக்கும் திரு. கிளின் கியூஸ், அதே போன்று பிரான்சில் எனது முதலாவது கண்காட்சிக்கு வழிகாட்டியாக இருந்தவரும் அன்றிலிருந்து இன்றுவரை எனது படைப்புக்களின் மாற்றங்கள், வளர்ச்சிகள் போன்றவற்றை நன்கு அறிந்தவருமான அனிக் சன்சோனி (Annick Sansoni), ஒவ்வொரு புதிய படைப்புகளுடன் இடம்பெறும் ஓவிய கண்காட்சிகளுக்கு வருகை தந்து, உரையாற்றி ஓவியங்கள் பற்றி என்னுடன் விவாதிக்கும் ஓவியர், கவிஞர், எழுத்தாளர் அரவிந்த் அப்பாத்துரை, ஈழத்து புகலிடக் கலைஞர்களில் ஓவியத்தின் வலு அறிந்து என்னுடன் ஓவியங்கள் பற்றி விவாதிக்கும் கவிஞர் பாலகணேசன், நண்பர்களாக உறுதுணையாக நிற்கும் புகைப்பட கலைஞன் பிரட் ரோன்ட் (Fred  Rond), சிவகுமார் ராமச்சந்திரன், இன்னும் பல நண்பர்கள் குடும்பத்தினர் பலரின் நட்பும் ஆதரவும் ஆசிகளும் உள்ளன .vasukan 3

ஒவியத்தில் உங்கள் பாணி எது? இந்தப் பாணி இயல்பாக அமைந்ததா அல்லது நீங்களாக விரும்பித் தேர்வு செய்ததா?

இது ஒரு முக்கியமான விடயம். ஓவியத்தில் மட்டும் அல்ல எந்த ஒரு கலைப் படைப்பிலும் ஒரே நேரத்தில் பல சிக்கலான கேள்விகளையும் ஏற்படுத்துகின்ற விடயமாகிறது. இருப்பினும் கலைஞர்களின் கால மாற்றங்கள், இடமாற்றங்கள் கலைப்படைப்பின் படைப்புக்களையும் அவர்களுடைய பாணியையும் மாறுதலுக்கு உள்ளாக்குகின்றன. ஓவிய கலையில் இருந்து வேறொரு கலைக்கு ஈர்கப்பட்டவர்கள் – சத்யஜித் ரே (Satyajit Ray 1921-1992), குரோசோவ (Kurosawa Akira 1910-1998), M.I.A (1975).

களங்கள் கூட மாறியிருக்கும். இதற்கு அப்பால் அவனுடைய தேடல் வேறாகி இருக்கும். மன அலைச்சல்களும் இதில் பங்கு வகிக்கின்றது. மேலாக, உலகின் அதிவேக வளர்ச்சியில், கலை வரலாற்றின் மாற்றங்கள், காலநிலை அனர்த்தங்களும் இவற்றில் பங்கு கொள்கின்றன. பிக்காசோவின் (Pablo Picasso 25 Oct 1881 – 8. April 1973) ஆரம்ப கால ரியலிசம் எனும் பாணி இறுதிக்காலங்களில் இருந்ததில்லை. அவை இடையில் வேறு பாணிகளில் பெருமாற்றங்களை தாண்டி இறுதியில் கியுபிச பாணியாக மாறியது. அவற்றில் வேறு பாணியில் அமைந்த வெளிவராத ஓவியங்கள் அவர் இறந்த பின்பு வெளிவந்தன.

அவசரமான உலகத்திலே எனது ஓவிய வரலாறு ஆரம்பம்தான். ஆனால் இடமாற்றங்கள் பலவாகி விட்டன. அனர்த்தங்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்காணலை கூட ‘மாடிநிக்’ நாட்டிற்கு எனது ஓவிய கண்காட்சிக்காக போய் திரும்பும் வழியில் விமானத்தின் எட்டு மணி நேர பயணத்தில் செய்து முடித்தேன். இன்னும் கேள்விகள் உள்ளன. அங்கு சென்றிருந்த நாட்களிலும் நான் எனது இனத்தின் கிளைகளையும் பழங்களையும் தேடினேன். ஆனால் அங்கு இருக்கும் மனிதன் அவனது இனத்தின் வேர்களை தேடுகிறான்.

vasukan 5எனது ஓவிய பயணத்தில் சொல்லவந்த விடயத்தை ஆழமாகவும் அழகாகவும் பூர்த்தியாகவும் சொல்கின்றேனா என்பது எனது படைப்பின் மேலுள்ள முயற்சி. இப்பயணத்தில் எனது பாணியை எனது ஆசிரியர் உற்றுநோக்கி அப்பாணியிலும் வேண்டியளவு பயணிக்குமாறு பணித்தார். அதன் பின் கண்காட்சி கூடத்திற்கு வரும் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. எனவே எனது பாணி இயல்பாகவே உருவாகியது. தற்போது அதில் விரும்பி பயணிக்கின்றேன் ஆனாலும் இதில் எவ்வளவு காலம் பயணிப்பேன் என்பது கேள்வி…

ஓவியக் கண்காட்சி தொடர்பான உங்கள் அனுபவங்கள் எப்படி?

கண்காட்சிகள் எனும்போது எனது படைப்புகளின் கண்காட்சி மற்றது இந்த நூற்றாண்டுக்கு முற்பட்ட படைப்பாளிகளின் கண்காட்சி. இதில் ஓவியம், சிற்பம், புகைப்படம், சினிமா, காணொளிப்படம், கட்டடக்கலை, அலங்கார வேலை, தையல் வேலைகள், எழுத்துக்கள், பாகங்களை பொருத்துதல் என்று இன்னும் பல கலை சம்பந்தமுடைய நிகழ்வுகளை காண்பதற்கும் அது பற்றி பேசுவதற்கும் ஒரு முக்கிய தளமாக பாரிஸ், இத்தாலி போன்ற நாடுகள் இருப்பதுடன் எமது கலாச்சாரத்துடன் இணைந்து பார்ப்பதற்கும் எனது கண்காட்சிகளை நடத்துவதற்கும் தூண்டு கோலாகவும் அமைகின்றது.

ஓவியம் கற்கும் காலங்களில் கண்காட்சிகளை எவ்வாறு ஒழுங்கு செய்வதென தெரிந்து கொண்டேன். படைப்புக்களை உருவாக்குவது ஒருபுறம் அவற்றை தெரிவு செய்து ஒழுங்குபடுத்தி காட்சிப்படுத்துவது இன்னொருபுறம். அதிலும் ஓவியக்கண்காட்சி எனும்போது அதன் நன்மையும் தீமையும் அதற்கு உரிய தளம் திறந்தவெளியாகின்றது. எந்த மொழி, இனம் வேறுபட்டவர்களும் வரக்கூடிய ஒரு தளமாதலால் பல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஒரு கண்காட்சியில் இருந்து மேலும் பல கண்காட்சிகளை ஒழுங்கு செய்யவும் வாய்ப்புகள் அமைகின்றன. எனது ஓவியத்தின் வர்ணங்கள் எமது கலாச்சாரத்தை குறித்து நிற்கின்றன. அதுபோன்று வேற்று கலாச்சாரத்தை அறியவும் பதியவும் பல வேறுபட்டவர்களின் வருகை உதவுகின்றது.

ஓவியக் கண்காட்சிகளுக்கு மக்கள் வரவு குறைவாக இருப்பது உங்களைப் பாதிப்பதுண்டா?

ஒவ்வொரு வருடமும் புதிய ஓவியங்களின் தெரிவில் மாநரசபை ஊடாகவோ, ஓவிய கூடங்கள் ஊடாகவோ ஒழுங்கு செய்யும் கண்காட்சிகளில் பலதரப்பட்ட பார்வையாளர்களின் வருகை அடுத்த கண்காட்சிக்கு உறுதுணையாகின்றது. இந்தவருடத்திற்கான கண்காட்சிகூட மார்ச் 2011 ல் ‘மாடிநிக் நகரில்’ காட்சிப்படுத்தப்பட்டது, புதிய நாடு, புதிய மக்கள், புதிய அனுபவம், புதிய பயம்… இருந்தும் மனம் நிறைந்த நிகழ்வாக இருந்தது. திரும்பி பிரான்ஸ் வரும்போது மனதிலும் கையிலும் பாரம் குறைந்திருந்தது, அதையடுத்து சென்ற மாதம், (sep-oct 2001) பாரிஸில் நடைபெற்ற Man in the mask(முகமூடிக்குள் மனிதர்கள்) என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியகண்காட்சி மேலுமொரு தளத்திற்க்கு நகர்த்தியுள்ளது

இவை தவிர, வேறு நிகழ்வுகளிலோ அல்லது ஓவியக் கண்காட்சியிலோ அதை நடந்துனர் இவ் ஓவியங்களைக் காட்சிப்படுத்தினால் அவரவரை பொறுத்து நிகழ்ச்சிகளின் ஒழுங்குகள் அமையும். அந்நிகழ்வில் மக்கள் குறைவாகவோ, கூடவாகவோ இருந்தால் மனம் வருந்தியதில்லை. ஓவியம் பயிற்றப்படாத பார்வையாளர்களின் உரையாடல்கள், வினாக்கள், செயற்பாடுகள் மனம்வருந்தச் செய்தாலும் ‘பொறுத்தார் பூமியாழ்வார்’. அவர்களையும் நவீன ஓவியத்தின் மேல் கேள்விகளை எழுப்பிவிட வேண்டிய கடமையும் என்னுடையதே. ஓவிய வரலாறுகளின் உண்மை நியாயமாகிறது – ‘குறைவு என்பதும் ஒரு வகையில் நிறைவுதானே’ போத்தலினுள் பானங்களை முழுமையாக விடுவதில்லை …vasukan 6

கண்காட்சிகளுக்கான தளங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள். கருத்து நிலையில் எதிர்பட்ட தளங்களில் உங்கள் கண்காட்சிகள் அமைந்ததுண்டா? அது தொடர்பான பார்வையாளனின் எதிர்வினைக்கு உங்கள் பதிலென்ன?

கலையும் காதலும் எதோ ஒரு வகையில் மதம், இனம், மொழி அற்றதாகிறது. எந்த ஒரு தளத்திலும் இயங்க கூடியவை.

படைப்பாளி, ஒரு ஓவியன் எவ்வாறான இடங்களில் இயங்க வேண்டுமென ஆராய்கிறானோ அவனது நவீன படைப்புக்கள் மூலம் அந்த ஓவியங்களின் வர்ணங்கள், குறியீடுகள், கோடுகள், புள்ளிகள், வெறுமையான சாதகமான இடைவெளிகள் என்ன விடயங்களை கூறி நிற்கின்றதோ என்பதை பார்வையாளன் தேடவும் வேண்டும், வினாக்களை தன்மீது குவிக்க வேண்டும்.

அவன் (படைப்பாளி) அவனது குடும்பத்திற்கோ, அவனது ஊரிற்கோ, தனது இனத்திற்கோ அவனது நாட்டிற்கோ ஒவ்வாமையான தளத்தில் நிற்கும் பொழுதும், அவனின், அந்தப் படைப்பாளி என்பவனின் தருணங்களும் நாடித்துடிப்புக்களும் என்ன சொல்ல முயல்கின்றன என்பது ஒரு அழகான ஆழமான கருத்து. ஒரு பிற்போக்கு தளமாக வலிமையான வரிகளை படைப்பாளி மீது இறைத்து விட முடியாது. சிறு குழந்தைகளில் கேள்வி எழுப்பும் தருணங்களை தாண்டி வந்தவர்கள் நாங்கள். எப்போதும் பல விடயங்களுக்கு இரு பக்கங்களும் உண்டு.

கிட்லர் தனது படையணிக்கு இட்ட கட்டளைகளில் ஒன்று – பிரான்சின் கட்டடக் கலையையோ அல்லது கலைப் படைப்புக்களையோ அழிக்க வேண்டாம். அதில் உயிர் தப்பிக்கொண்டவை, ‘மோனலிசா’ ஓவியம் (வரைந்தவர் ‘லியனார்டோ டா வின்சி’ – Leonardo daVinci,16.04.1452 – 02.05.1518 – இத்தாலி) இருக்கும் உலகில் பெரிய கலைகூடமான ‘லூவ்’ (Musée du Lourve) ஈபில் கோபுரம் (Eiffel tower 1887 – 1889), உலகின் மிகப்பெரிய மாளிகையான ‘சத்தோது வேர்சை’ (Chateau Versailles) போன்று இன்னும் பல.

கிட்லரின் (1889 – 1945) பாசிசத்துக்கு எதிராக வெளிவந்த நவீனத்துவமான சப்ளினின் (1889 – 1977) ‘த கிறேட் டிக்டேட்டர்’ படம் (The Great Dictator) கிட்லருக்கு சாதகமாக அமைந்துள்ளதெனக் கூறி (சப்ளினின் தீவிர ரசிகர்களில் கிட்லர் முதன்மையானவர் – அந்த படத்தை கிட்டலர் கூட பார்த்திருந்தார்) மக்களின் எதிர்ப்பை சப்ளின்மேல் போடமுயன்றது அமெரிக்கா. சாப்ளின் அமெரிக்காவை விட்டு வெளியேறிய பின்பும் அவரது படங்களின் மவுசும், அவரது புகழும், ஆதரவும் கூடவே, அமெரிக்கா அவரது படங்களுக்குப் பரிசு என்ற போர்வையில் மீண்டும் அழைத்தது. சப்ளின் அதை ஏற்க மறுத்ததோடு அமெரிக்காவிற்கு திரும்பி செல்லவேயில்லை அவரது வாழ்நாளில்.

நாளை நீங்களும் உங்கள் படைப்புகளும் எவ்வாறு இனங்காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

ஐந்ந

Advertisement

Comments are closed.