வல்லப கணபதியே வந்தருள் தாருமென்றே
தொல்லைகள் நீங்கவேண்டி தொழுகின்றோம் நின் பொற்பாதம்
சொல் மொழியிலாது இங்கு உன்னைச் சரணடைந்தோம்
நல்வழி காட்டியிங்கு நன்னெறி செழிக்குமாறு நின்னருள் தாருமையா.
எல்லையொன்றில்லா இசைமழை பொழிந்து கலைஞர் போற்ற
வல்ல நல் வேத ஓசை எண்திசை பரவுமாறு அந்தணர் ஆர்த்தொலிப்ப
கல்லென கிடந்த நெஞ்சும் உருகியே உன்னை ஏத்த
அல்லல்கள் நீக்கவேண்டி ஏற்றினோம் கொடியுமக்கு வல்லமை தாருமையா
ஐந்தொழிலின் தத்துவத்தை செப்பிடுநல் உற்சவத்தில்
முந்துறு நல்லாக்கமதை உணர்த்துமின்னாள் நிறைவுறவே
வந்திருந்து உனைத்தொழுதார் சங்கடங்கள் தானகல
நந்திமகனே தந்திமுகத்தோனே சந்திரசேகரனே நல்லருளைத் தாருமையா.
சா.தணிகாசலபதி